பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

109

எண்ணம் ஏற்பட்டது; ஏற்படுத்தப்பட்டது. நமது “புனிதக் காதல்” எழுத்தாளர்கள் இத்தகைய சூழலை ஆழ்ந்து பார்த்து, எழுத வேண்டும்; எழுதினால் நன்றாக இருக்கும். இப்போது ஒடிப்போனவனும், உடன்போனவளும் இரு கூட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள் என்ற சுப செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் இருதரப்பிலும் ஏதாவது ஒரு தரப்பு சற்று மிதமிஞ்சிப் போயிருந்தால், கொலை அல்ல, படுகொலை விழுந்திருக்கும். காவல்துறையினரோ ‘மாமூலாகத்தான்’ நடந்தார்கள். இந்தக் கொலைகள், காவல்துறை இருந்தும் நடைபெறவில்லை என்பதுதான் முக்கிய அம்சம்! இந்தப் பின்னணியில் ‘கோலவடிவு’ என்ற தொடர்கதையை ‘தினகரனில்’ எழுதினேன்.

குறிப்பு: நான் எழுதியதில் ஒரு வரியைக்கூட மாற்றாமல் வெளியிட்ட தினகரனுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தத் தொடர்கதை ‘சாமியாடிகள்’ என்ற தலைப்பில் மதுரையில் உள்ள மீனாட்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இன்றைய கிராமங்களில் வீடியோ - ஆடியோ தாக்கங்கள் எப்படி இருக்கின்றன என்று விலாவாரியாக எடுத்துக்கூறும் படைப்பு.