பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

131

பணியை சுறுசுறுப்பாகச் செய்வாள். அவள் ஏழை என்பதாலும், ஒரு பெரிய குடும்பத்தை சுமந்து கொண்டிருப்பதாகச் சொன்னதாலும், எனக்கு அவளிடம் ஒரு பரிவுணர்வு. எங்கள் இலாகா இயக்குனர் எனக்கு மிகவும் வேண்டியவர். சென்னைக்கு வந்திருந்த அவரிடம் வாதாடி, இந்தப் பெண்ணிற்கு இவள் தகுதிக்கு மீறிய ஒரு உயர்ந்த வேலையை இன்னொரு துறையில் வாங்கிக் கொடுத்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு கடிதம் வந்தது. எங்கள் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஒருவர், தனக்கு அன்பளிப்பு பணம் வரவில்லை என்று கடிதம் எழுதியிருந்தார். கேஷ் புக்கைப் பார்த்தால், அதில் அவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கடிதம் எழுதியிருந்தது. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு மிரட்டினேன். அந்த உத்தமி உண்மையை ஒப்புக் கொண்டாள். தில்லிக்கு இப்படி பணம் கொடுத்ததற்காக எழுதியக் கடிதத்தை கிழித்துப் போட்டுவிட்டு, டெஸ்பாட்ச் ரிஜிஸ்டரில் தில்லிக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாக எழுதியதாகவும், வேண்டுமென்றே மோசடி செய்ததாகவும் அவள் ஒப்புக் கொண்டாள். இந்த விவகாரத்தை நான் தில்லிக்குத் தெரிவித்திருந்தால், அவள் சின்னாபின்னமாகி இருப்பாள். எனக்கோ மனசு கேட்கவில்லை. பணம் அனுப்பாதவர்களுக்கெல்லாம் பணம் அனுப்பும்படி சொல்லி விவகாரத்தை விட்டுவிட்டேன். அப்போது ஏதாவது தப்பு செய்திருந்தால் இப்போதே சொல்லிவிடு. சரிக்கட்டி விடுகிறேன்” என்று கூட சொன்னேன். அவள் சத்தியம் செய்தாள்.

ஒருநாள் அலுவலக டெலிபோன் கட்டாகியது. விசாரித்தால், டெலியோன் பணம் கட்டப்படவில்லை