பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

சு. சமுத்திரம் ☐

தூங்கிக் கொண்டிருந்த ஒரு “மூதேவி” எழுந்தாள் எங்கள் பேச்சு, அவள் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதாகவும், இந்திரா காந்தியிடம் புகார் செய்யப்போவதாகவும் அதட்டினாள். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்ததேன். இவ்வளவுக்கும் அவள் தமிழ்நாட்டுக்காரி. “அம்மா உங்களுடைய வசதிக்காகத்தான் பிடிஓ சார்கிட்டே சண்டை போடுகிறேன்” என்று பரிதாபமாச் சொன்னேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் அவள் கேட்கவில்லை. கண்டபடி திட்டினாள். உடனே நானும் “சரிதான் போடி” என்று, சொல்லிவிட்டு ஆணையாளருடன் போய்விட்டேன். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால், மேக்கப் அறையில் ஒரே கலாட்டா. நான் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், கலைநிகழ்ச்சி நடக்காது என்பதோடு, விவகாரம் அன்னை இந்திரா காந்தியிடம் போகும் என்றார்கள். என்னுடைய மேல் அதிகாரி என்னை மன்னிப்புக் கேட்கச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். உடனே அவர் என் சார்பில் மன்னிப்புக் கேட்டார். உடனே அந்த மன்னிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று நானும் உரக்கக் கத்தினேன். எப்படியோ கலை நிகழ்ச்சி கலைக்கப்படவில்லை.

இந்த நாட்டியக்குழு நங்கையரை கூட்டிக் கொண்டு, உத்திரமேரூர் போனேன். இதற்குள் அந்தப் பெண்களுக்கு என்மேல் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர்களது வசதிகளை நான் நல்ல படியாகக் கவனித்துக் கொண்டதும், நான் வெளிப்படையாக பேசக்கூடியவன் என்பதும், அவர்களுக்குப் பிடித்து விட்டது. உத்திரமேரூரில் இவர்களுடைய பிரமாத