பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

143

‘நாகமணி’ நல்ல பத்திரிகை என்பதால் அதுவும் விரைவில் மூடப்பட்டது. எனக்குப் பிடித்த குறுநாவல்களில் இது ஒன்று.

ஊருக்குள் ஒரு புரட்சி

செய்தி - விளம்பர அதிகாரியாக இருக்கும்போது நமது ஐந்தாண்டு திட்டங்கள் எப்படி சீரழிந்து செயல் இழந்து அமல் செய்யப்பட்டன என்பதை நேரிடையாகக் கண்டேன். பணக்காரர்கள், ஏழைகள் பெயரில் மாடுகளை வாங்கி பயன்படுத்திக் கொள்வதையும் சமபந்தி போஜனம் என்ற பெயரில் அரிஜன மக்களுக்கு சாப்பாடு போட்டே அவர்களைச் சாப்பிட்டதையும் கண்டேன். பெரும்பாலான வங்கிக் கடன்கள், உதவிப் பொருட்களை எல்லாம், ஏழைகள் பெயரில் பணக்காரர்கள் அமுக்கிக் கொள்வார்கள். மாவட்ட அதிகாரிகளும், ஜாதிக்கார கிராமங்களுக்குப் போய் பண்ணையாளர்கள் வீட்டில் கோழி வகையாறாக்களைத் தின்றுவிட்டுப் போய்விடுவார்களே தவிர, சேரிக்கார காலணிகளுக்குப் போகமாட்டார்கள். பொதுவாக, தாசில்தார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்துக் கொண்டு ஊர்களை அடித்து உலையில் போடுவார்கள். இவர்களோடு தனியார் பள்ளிக்கூட மானேஜரும் சேர்ந்து கொள்வார். கிராம நிர்வாக அதிகாரிகளும் இவர்களது கட்சி. இந்தப் பின்னணியில் ஏழை மக்களால் எதுவுமே செய்யமுடியாது. இந்த அம்சங்களை எல்லாம் வைத்து ஒரு குறுநாவல் எழுதினேன். ‘கல்பனா’ என்ற மாத நாவல் பத்திரிகை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு