பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

165

என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பது நாவலில் ஒரு அம்சம். சொல்லுக்குச்சொல் “காலனிக்காரி, காலனிக்காரி,” என்று அவளை ஒரேயடியாய் பிரமை அடிக்க வைத்து, அவள் தகுதிக்கோ, தேர்வுக்கோ குறைந்த, டெஸ்பாட்ச் செக்ஷனில் போடுகிறார்கள். இதே சமயம், சர்வீஸ் கமிஷன் தேர்வு மூலம் வராத சந்தானம் என்ற இளைஞனை அக்கவுண்டண்ட் வேலையில் வைக்கிறார்கள். இந்தச் சமயத்தில் பின்தங்கிய சமூகத்திலிருந்து வந்த சரவணன் என்ற இளைஞன் அந்த ஆதிதிராவிடப் பெண்ணை மேன்படுத்துகிறான். அவளுக்குரிய செக்ஷனைக் கொடுக்கிறான். “கான்ட்ராக்டர்களுடன் உடன்பட மறுக்கிறான். இதனால், அலுவலக மேல்ஜாதிக்காரர்களாலேயே அல்லலுக்கு உள்ளாகிறான். ஆனாலும், அரசு விதிமுறைகளுக்கு மாறாக போராட்டத்திற்கு தயாராகிறான்.

விருதுக்கான பாராட்டு விழாவில் என்னை வாழ்த்திப்பேசிய பலர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தூசி படிந்த கண்ணாடி மாதிரி; அதை துடைக்க வேண்டுமே தவிர உடைக்கக்கூடாது” என்று சரவணன் தன் சகாக்களுக்குச் சொன்ன அறிவுரையை மேற்கோள் காட்டிப் பேசினார்கள். இந்த நாவலில் வருவதுபோலவே, ஒருவேளை என்மீதுள்ள பிரச்சார தூசியை துடைத்து என்னைப் பிரகாசப்படுத்துவதற்குப் பதிலாக நான் ஏற்கனவே சொன்ன பேர்வழிகள் என் முகத்தை உடைப்பதையே ஒரு பிரச்சாரமாக வைக்கிறார்கள். இதே நாவலில் சரவணன், மேல்ஜாதி ஜூனியர்களைப் பார்த்து, “அரசாங்க வேலை என்பது உங்களுக்கென்ன பட்டா போட்ட சொத்தா” என்று