பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

சு. சமுத்திரம் ☐

முதலில் அவள் லேசாய் சிரித்து விட்டு தேவையில்லை என்றாள். நான் வற்புறுத்தியபோது “சரி, அந்த பேச்சு விட்டுட்டு அடுத்த பேச்சு பேசுங்க” என்று கண்டிப்புடன் கூறினாள். அந்தக் கண்டிப்பைக் கண்ணகி இவளைவிட அதிகமாகக் காட்டியிருக்க முடியாது. எனக்கு கண்ணகித் தன்மை பிடிக்காது என்றாலும், இந்தக் கோனார்ப் பெண் காட்டிய கற்பின் வலிமை, கண்மூடியபடியே காலங்கடந்த கணவனை நினைத்துப் பார்த்த சோகமயமான லாகவம், அத்தை மீது கொண்ட பாசம், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அதிகாரிகளிடம் விடுத்த வேண்டுகோள் என்னை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலில் வரும் உலகம்மை மாதிரியானவள். இவளை வைத்தே மிகப்பெரிய நாவல் ஒன்றை எழுதலாம். துவக்கத்தில் சிறுகதையாகச் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். இந்த ‘பாழும் வேலையில்’ மாட்டிக் கொண்டதால் அடுத்தவர்கள் சொல்வதைத் தான் செய்தியாக்க நேரம் இருக்கிறதே தவிர நான் சொல்ல வேண்டியதைச் சொல்ல காலநேரம் கிட்டவில்லை.

சுபேதாவா - சும்மாவா

வானொலி செய்தியாளர் என்ற முறையில் பல்வேறு தரப்பு மனிதர்களைப் பார்க்கும் அனுபவம் கிட்டுகிறது. ஒருதடவை, எழுத்தாளர் பொன்னிலன் அவர்களிடம் என்னால் எழுதமுடியவில்லை என்று குறைப்பட்டபோது “நாட்டின் நாடித்துடிப்பையே அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கும் நீங்கள் இப்படியா சொல்வது” என்றார். அவர் சொல்வது