பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

சு. சமுத்திரம்

பிட்டுக் கொண்டிருப்பவர்கள். முருகன், பிள்ளையார் கோவில்கள் இரண்டு உண்டு. இவற்றிற்கு பிள்ளைமார்கள்தான் போவார்கள். மாடன்களை வழிபட்டுக் கொண்டிருக்கும் ‘வடக்கூரார்’களுக்கு தாங்கள் இந்துக்கள் என்று தெரியாது. எனக்கும் அப்போது தெரியாது. கிறிஸ்தவ ஆலயக்காரர்கள் மாடன் கோவில்களுக்கு போவதும், மாடன் கோயில்களில் சாமியாடுகிறவர்கள் கூட கிறிஸ்தவ கோயில்களுக்குப் போவதும் அத்துபடி. வருடத்தில் இரண்டு மூன்று தடவை அந்தக் கிறிஸ்தவ ஆலயத்தில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு அனைத்து சினிமா பாடல்களும் ஒலிக்கும். அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நானும் நண்பர்களும் குளத்துக்கரையில் “வாராய் நீ வாராய்” என்ற பாட்டையும் “அமுதைப் பொழியும் நிலவே” என்ற பாட்டையும் எங்களுக்குப் பிடித்த பெண்களை மனதில் நினைத்துக் கொண்டு கேட்டது நினைவுக்கு வருகிறது. பண்டிகை முடிந்ததும், செட்டுக்காரன் ஸ்பீக்கரை சுழட்டிக்கொண்டு டவுனுக்கு போகும்போது எங்களுக்கு என்னவோ போல் இருக்கும். ஏனென்றால், எங்கள் ஊரில் அப்போது ரேடியோ கிடையாது. கல்யாணத்தில் கூட மேளம்தான். ஆகையால் எனக்கு கிறிஸ்தவ மதத்தில் (சினிமாபாட்டை கேட்பதற்கு) ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு பெண் கொடுக்கல் வாங்கல் கூட ஒரே சாதிக்குள்தான் நடக்கும். மாடசாமி ஒரு நாளைக்கு எட்வர்டு என்றாகி ஒரு எலியபெத்தை திருமணம் செய்து கொள்வான். ராசம்மா திடீரென்று ரோஸ்லின் ஆகிவிடுவாள். ஆனால் பழக்கவழக்கத்திலோ மற்றவற்றிலோ எந்த வேறுபாடும் இருந்தது இல்லை. நிலைமை இன்னும்