பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாதிகளிடம் ஒரு மாணவனைப் போல் அணுகி இருக்கிறேன். இப்போது புதுடெல்லியில் கட்சி மேலிடத்தில் அங்கம் வகிக்கும் என் இனிய தோழர் து. ராஜாவும், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கதை சம்பந்தமாக காரசாரமாய் வாதிட்டதும், இதனாலேயே அவரும், நானும் சொந்த சகோதரர்களாய் ஆகிவிட்டதும், என் இலக்கிய பயணத்தில், நான் களைப்படையாமல் இருப்பதற்கான, கணிதரு நிழல்கள். பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள், இலக்கியத்தை எப்படி அணுக வேண்டுமென்று எனக்குப் பாடம் புகட்டியவர். தாமரையில் வெளியான “ஐம்பெரும் விழா” என்ற குறியீட்டுக் கதையை விமர்சனம் செய்த முதல் திறனாய்வாளர். அவரது இழப்பு எனக்கும், பொன்னிலனுக்கும் பெரும் பேரிழப்பு. என்றாலும் ஆர்.என்.கே. அவர்களும், தாமரையில் இப்போதைய பொறுப்பாசிரியர் தோழர் மகேந்திரனும், என்னை மேன்படுத்தும் பல்வேறு குறிப்புகளை தாமரையில் எழுதி, என் எழுத்துக்கு ஊன்றுகோலாய் இருக்கிறார்கள், என்.சி.பி.ஹெச். நிறுவனம் என்னை தனது எல்லா விழாக்களிலும் பேசவைத்து கெளரவித்துள்ளது. தமிழகத்தின் தலைசிறந்த வழக்கறிஞரான என்.டி.வானமாமலை அவர்கள் இன்றளவும் என் கதைகளை விமர்சித்து என்னை உற்சாகப்படுத்துபவர்.

தாமரையுடன் தொடர்பு ஏற்பட்ட காலக்கட்டத்தில், என் சிந்தனையை வளப்படுத்தியவர்களில் முக்கியமானவர் கவிஞர் இளவேனில். சர்வதேச இலக்கியத்தையும், அரசியலையும், மார்க்சிய முறையில் பார்த்த இந்த தோழரும், நானும், சா. கந்தசாமி, மலர்மன்னர், ஞா. மாணிக்கவாசகன், வ.உ.சி.யின் பேரன் இளங்கோ போன்றோரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய இலக்கிய வாதம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. இளவேனிலின் மனிதநேயமிக்க நட்பு இன்னும் என்னை செழுமைப் படுத்திக் கொண்டிருக்கிறது.

செம்மலரில்...

இதற்கு அடுத்த கட்டமாக, என் எழுத்து ஆழப்படுவதற்கும், ஒரு இயக்கமாக மாறுவதற்கும் காரணமாகத் திகழ்வது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் செம்மலர் பத்திரிகையும். மணியக்காரரின் மகனாகப் பிறந்தாலும் சொத்துக்களை உதறிவிட்டு, தூய தொண்டில் ஈடுபட்ட பெரியவர் கே.முத்தையா அவர்களை,