பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சு. சமுத்திரம் ☐

அண்ணன் வரட்டுண்டா... கரிமூஞ்சி

கல்லூரிக் காலத்தில், எல்லா இளைஞர்களுக்கும் வரும் “கெட்ட புத்தி” எனக்கும் வந்தது.

அப்போது ஞாயிற்றுக்கிழமைதோறும் குமுதம் வரும். அதை அன்றே படித்து முடித்து விடுவேன். அதனால் திங்கட்கிழமை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். அந்தக் குறுகுறுப்பில், மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு முடிந்தது. நான்காவது ஆண்டு சாப்பாட்டுக்கு வழியில்லை என்றாலும். குமுதம் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. பல்வேறு சூழல்களால், சப்பாட்டிற்கே அல்லாடிய நான், என் ஒன்று விட்ட தங்கை வீட்டில் அவ்வப்போது சாப்பிட்டு வந்தேன். அவளும் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் எனக்கு உணவளித்தாள். அந்த வீடும், நான் சொன்ன வீடு மாதிரி ஒரு காம்பவுண்ட் வீடு. பதினைந்து குடும்பங்கள் வாடகைக்கு வாழ்ந்த வீடு; அந்த வீட்டுக்காரம்மாவின் மகளுக்கு என்னைப் பார்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் இருந்ததாகத் தெரியவில்லை. கையில் அண்ணன் குழந்தையை வைத்துக் கொண்டு, “எப்போடா வேலைக்குப் போறே?” என்பாள் “கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணக் கூடாதாடா” என்று சீண்டுவாள். “உனக்கு நல்ல வேலை கிடைச்சாதான் எனக்கு நிம்மதிடா” என்பாள். நான் நிஜமாகவே அப்போது கிறுக்கன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் டயலாக் சினிமாக்கள், குமுதம், ஆகியவற்றின் உந்துதலில் அப்படி ஒரு காதல் கடிதத்தை அவளுக்கு கிறுக்கி இருக்க மாட்டேன். அவசரம் அவசரமாக ஒரு காகிதத்தில் என்னமோ