பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சு. சமுத்திரம் ☐

என்றுதான் பாடினான் என்கிறான். பாடியது பள்ளா, கள்ளா என்பது விவாதம். பண்டாரம் இன்னொன்றையும் கண்டு கொள்கிறான். சுந்திர தினத்தன்று எல்லா அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். ஆனால் அந்த அலுவலகத்திலோ அது ஏற்றப்படவில்லை. பண்டாரத்திற்குக் கொண்டாட்டம், தேசியக் கொடி ஏற்றப்டாத வெங்கொடுமையை நினைத்து பல்லுடைத்த பியூன், பாரதியார் பாட்டைப் பாடி தனது தேசபக்தியை நிலைநாட்டினான் என்றும். இதைப் பொறுக்காத அதிகாரிகள், அவனைப் பழிவாங்குகிறார்கள் என்றும் எதிர்க்குற்றம் சாட்டினான். இந்த நாட்டிலே தேசபக்திப் பாடலை அபிநயத்துடன் ஒரு தேசபக்தன் பாடினால், அது குடிகாரத்தனமா? என்று திருப்பிக் கேட்டான். பல் உடைத்தவன் மன்னிப்புக் கேட்கிறான். பல் உடைந்தவனோ கொக்கறிக்கிறான். இப்படி ஒரு கதையை எழுதி கல்கிக்கு அனுப்பினேன். பிரசுரித்தார்கள்.

பார்லிமென்டில் ஒரு கேள்வியும் - பண்டாரமும்

சென்னைத் தொலைக்காட்சியில் உதவி செய்தியாசிரியராகப் பணியாற்றிய எனக்கு நியாயமாக அங்கேயே பதவி உயர்வு கொடுத்திருக்க வேண்டும். அப்போது சக அதிகாரி ஒருவரின் சூழ்ச்சியால் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டேன். இந்த அதிகாரி நான் தொலைக்காட்சிக்குப் போவதற்கு முன்பு வியாபாரச் செய்திகளை திணித்தார். பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் செய்தி ஆசிரியரையும் கைக்குள் போட்டுக் கொண்டார். நான் அங்கே போன பிறகு இத்தகைய வியாபாரச் செய்கை