பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீர்திருத்தத் திருமணங்கள்

இப்போது சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடை பெறுகின்றன. சீர்திருத்த முறையில் திருமணங்கள் நடைபெற வேண்டுமென்பதில் இப்போதெல்லாம் மக்களிடம் அதிகமான அக்கரை காணப்பட்டு வருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படிப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கு எவ்வளவோ எதிர்ப்புகள் இருந்தன. அன்று இப்படிப்பட்ட திருமணங்கள் இல்லை. அப்போது எதிர்ப்புகளும் ஏராளம், இப்படிப்பட்ட திருமணங்களுக்கு இப்போது எதிர்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் ஏராளமான சீர்திருத்தத் திருமணங்கள் மிகவும் தாராளமாக நடைபெறுகின்றன. என்றாலும் எதிர்ப்புகள் அடியோடு இல்லவே இல்லையென்று கூற முடியாதே!

எவ்வளவுதான் அதிகமான சீர்திருத்த திருமணங்கள் நடந்தபோதிலும், அவற்றைப் பற்றிய சந்தேகங்கள் மக்களுக்கு இன்னமும் அடியோடு நீங்கிவிட்டதா? நீக்கப் பட்டுவிட்டதா? இல்லையே!

சீர்திருத்தத் திருமணங்கள் அதிகம் நடை பெறவேண்டும் என்பதிலும், சீர்திருத்த முறையிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதிலும் இன்றைக்கு