பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

மணம் செய்துகொள்வதற்குச் சாட்சிகளாக இருக்கவும், மணமக்களை வாழ்த்தவும். புத்திமதிகளைக் கூறவுந்தான் நாம் அனைவரும் இங்கே கூடியுள்ளோம். இதைத் தான் நாம் செய்கிறோம். இதைக்கண்டு ஏன் சிலர் சந்தேகப்பட வேண்டும்? எதற்காக எதிர்ப்புக் காட்ட வேண்டும்?

சில பெரியவர்கள், வைதீகத்தில் பெரிதும் ஊறியவர்கள் வேண்டுமானால் சில காரணங்களைக் கூறுவார்கள். அதாவது இந்தத் திருமணத்திலே அவர்கள் எண்ணப்படியும் முறைப்படியும் காரியங்கள் நடைபெறவில்லை என்பதுதான் அவர்களுக்கு ஏற்படும் குறைகள்!

அவர்கள் எண்ணப்படி, முறைப்படி நாம் இங்கே அய்யரை அழைத்து அக்கினி வளர்க்கவில்லை. அகல் விளக்கு ஏற்றி வைக்கத் தவறி விட்டோம். அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கத்தை விட்டுவிட்டோம். அரசாணிக்கால் நாட்டி அதைச் சுற்றி வரவில்லை. மணமகன் அய்யர் மந்திரம் ஓதித் தாலி கட்டவில்லை.

இப்படிப்பட்ட சில வழக்கமான பல சடங்குகளைச் செய்யவில்லை. இதுதான் இன்று எதிர்ப்புக் காட்டும் சிலரது குற்றச்சாட்டுகள். சீர்திருத்தத் திருமணங்களைப் பொருத்தமட்டில் இக்குற்றச் சாட்டுகளை நாங்கள் மறுக்க வில்லை; மறுக்கவும் மாட்டோம். அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

நாங்கள் சீர்திருத்தம் என்று கூறுவதே, இப்படிப் பட்ட சடங்குகளை நீக்கவேண்டும், அடியோடு விட்டு விட வேண்டும் என்பதுதானே. அப்படியிருக்க சடங்குகள் இல்லையென்று கூறுவதைக் கேட்டு அவைகளை எப்படி மேற்கொள்ள முடியும்?

சீர்திருத்தத் திருமணம் தேவையென்பதற்காக நாங்கள் கூறும் காரணங்களை மறுத்தல்ல இன்று காணப்படும்