பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

ஏதோ சில காரியங்களைச் சடங்குகள் என்றும் சாஸ்திர முறைகள் என்றும் பழையவழக்கங்கள் என்பதற்காக மட்டும் எந்தவிதமான காரணங்களுமின்றி நம்மையறியாமலேயே நாம் செய்து வருகிறோம். இவைகளைத்தான் நாம் சரியா? தேவைதானா? என்று சீர்தூக்கிப் பார்த்து முடிவு கட்டவேண்டும்.

மக்கள் தமது அன்றாட வாழ்வில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறார்கள்; செய்கின்ற அத்தனை காரியங்களுக்குமா எண்ணிப் பார்த்துச் செய்து கொண்டிருக்கிறார்கள்! இல்லை! அப்படிச் செய்வதில்லை.

எத்தனையோ காரியங்களை ஏன் செய்கிறோம்! என்ன அர்த்தம், எப்படிப் பொருத்தம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிராமலே, ஏன்? ஒரு சிறிதும் எண்ணிப் பாராமலுங்கூடத் தங்களை யறியாமல் பல காரியங்களைப் பலர் செய்து வருவதை நாம் காண்கிறோம்!

உதாரணத்திற்காக நான் சிலவற்றைச் சுற்றிக்காட்ட விரும்புகிறேன். சிலருக்குத் தூக்கம் வருவதற்கு கொட்டாவி வரும். அப்படிக் கொட்டாவி விடும்போது விரல்களால் மூன்று சிட்டிகை போடுவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நண்பரைப் பார்த்து அவர் கொட்டாவி வரும்போதெல்லாம் மூன்று சிட்டிகை போடுகிறாரே, அதற்கு என்ன காரணம் என்று கேளுங்கள்.

கொட்டாவி விடும் நண்பர் சிறிது கோபத்தாரராக இருந்தால் முறைத்துப் பார்ப்பார். அல்லது சாந்தமானவராக இருந்தால் மெதுவாக சீரித்துக்கொண்டே 'அது ஏதோ பழக்கம்'—காரணம் ஒன்றுமில்லை என்று பதில் கூறுவார்.

காட்முலை திடும் இதைப் போலவே சூளையில் உள்ள பெரியவர் புரசைவாக்கத்தில் நடந்த ஒரு சச்சரவில் பஞ்சாயத்து செய்யப் புறப்படுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம்.