பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வைகுந்த பதவியையும் சிவலோக வாசத்தையும் தங்களுக்காக கேட்ட அந்த முனிவர்களையும், அவர்கள் பாடிய பாடல்களையும் இந்தத் திருமணத்தில் அழைப்பதும் பாடுவதும் பொருத்தமற்றது தானே! இங்கே வந்தாலும் அவர்கள் தங்களுக்குத் தான் எதையாவது கேட்பார்களே தவிர நமக்காக ஒன்றும் பேசமாட்டார்கள்; கேட்கமாட் டார்களே! ஆகவேதான் இங்கே எந்தப் பக்தரையும் சரி. அய்யரையும் சரி, நாங்கள் அழைக்கவில்லை அழைப்பதுமில்லை. அதைப் போலலே நமக்காக எழுதப்படாத பாடப்படாத எந்தப் பாடலையும் பாடுவதில்லை. பாடவும் விடுவதில்லை.

நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்படும் அக்கரை காட்டும் நண்பர்களைத் தான் நாம் அழைக்கிறோம். அப்படிப்பட்டவர்களால்தானே நாம் முன்னேற வழிவகைகளைக் காட்டமுடியும்! கூறமுடியும்.

ஆகவே தேவாரம் பாடவில்லை. அய்யரைக் கூப்பிட்டு மந்திரம் ஓதவில்லை என்பதற்காக எவரும் கவலைப் படத் தேவையில்லை யென்பதை மறுமுறையும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

கடைசியாக சில பெரியவர்கள் இங்கே அம்மி மிதித்து அருந்ததி காட்டவில்லை ஆண்டவனைப் போற்றவில்லை என்று குறைபடுவதற்கும் அர்த்தமில்லை என்று சொல்லி விடுகிறேன்.

திருமணத்தில் அக்கினி வளர்ப்பது எதற்காக? திருமணத்திற்கு அக்கினித்தேவன் சாட்சியாக இருக்கிறான் என்பதற்குத் தானே! அந்த அக்கினி பகவான் யோக்கியதை என்ன? அருந்ததி என்று ஒரு சினிமாகூட வந்ததே! அதைப் பார்த்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும், நான் கூறப்போவது. ஒரு காலத்தில் சப்தரிஷிகள் ஒரு யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்குச் சென்று அவிர்ப்பாகம்