பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

நன்குணர்ந்து, பயன்படுத்தி வந்தனர். மகிழ்ந்தனர்; மகிழ்வித்தனர்.

தினைப் புனத்திலிருந்து ஓர் தீஞ்சுவை மொழியாள் தத்தை எனப் படுவாள்! இசை மொழிவாள். அந்த இசை கேட்ட பறவைகள் இசைக்கு வயமாகி மயங்குமாம்!

மலையோரத்தில், குறிஞ்சி பாடக் கேட்ட களிறு உறங்குமாம்! இனிய இசையில் மயங்கி "அகணபா எனும் இசையறி பறவை, எதிரில் தன்னை மறந்து நின்று, பிடிபடுமாம்; ஆனினங்கள் அடங்குமாம்; மதங்கொண்ட யானையும் இசைக்கு அடங்கும் என்று கலித்தொகை கூறுகிறது. அதுமட்டுமா?

"ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை"

அதாவது, கள்வரும், இசை கேட்டுக், கொடுந் தொழில் மறந்து நின்றனராம்!

தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவிகள் என இசைக் கருவிகள் எண்ணற்றன இருந்தன.

தோற்கருவிகளில் மட்டும், பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை முதலிய முப்பதுக்கு மேற்பட்டு இருந்தன.

இசைக் கருவிகளுக்கு இயம் என்றோர் பெயருண்டு. பலவகை இசைக் கருவிகளையும், வாசிக்கத் தெரிந்த காரணம் பற்றி ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனார் என்ற பெயரும் இருந்தது!

பாடுவோர் பாணர் என்ற தனிக் கூட்டமாகவும் இருந்து, தமது முதுகுகளில், வகை வகையான இசைக்