பக்கம்:எனது நண்பர்கள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
132  எனது நண்பர்கள்
 

கந்தசாமி கோவில் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களனைவருக்கும் யாழ்ப்பாணத்திலேயே முதலாவதாகத் திறந்துவிடுவதில் வெற்றியும் கண்டவர்.

உரும்பிராய் விருந்தில் உரையாடி மகிழ்ந்த எங்களிருவரையும் மறுநாள் கடல் பிரித்துவிட்டது. அவர் 7ஆம் நாள் மறைந்துவிட்டார் என்ற செய்தி திருச்சிக்கு வந்து திடுக்கிடச் செய்தது. அவர் உடல் மறைந்து விட்டது. எனினும், அவரது இன் சொல்லும், நன்முகமும் என் உள்ளத்தைவிட்டு மறையவேயில்லை.

7 ஆண்டுகள் அவருடன் கொண்டிருந்த நட்புறவினால், அமரர் அவர்களின் 7 ஆவது நினைவு தினவிழாவில் கலந்து கொண்டு, அவர் பிறந்த இடத்திலும், அவருடை கோப்பாய் தொகுதியிலும் நான் அவரைப் பற்றிப் பேசிமன அமைதியடைந்தேன்.

தமிழ் உள்ளவரை, தமிழ் மக்கள் உள்ளவரை, தமிழ் நிலம் உள்ளவரை, அமரர் வன்னியசிங்கம் அவர்களின் அரும்பெரும் தொண்டும் பெரும்புகழும் மறையாது. வண்டமிழ்ச் சிங்கம் வன்னியரின் புகழ் வானுள்ளவரைக்கும் வளர்ந்து கொண்டே போகும்.

இன்றுள்ள இலங்கை நிலையை அவர் காணாது போனது ஒரு வகையில் மகிழ்ச்சியையும், மற்றொரு வகையில் வருத்தத்தையும் தருகிறது. என் செய்வது?