பக்கம்:எனது நண்பர்கள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  149
 
கொடை வள்ளல்

சலியாமல் முயற்சித்து, ஓயாமல் உழைத்து, நேர்மையாக நடந்து, நல்லவழியில் பொருளைத் தேடி, சிக்கனமாகச் செலவிட்டு, எஞ்சிய பொருளை நல்ல அற நிலையங்கள் பலவற்றிற்கு வாரி வழங்கி மகிழ்ந்த கொடைவள்ளல் அவர்.

பேரிழப்பு

இத்தகைய உயர்ந்த தொழில் நிபுணரும், சிறந்த மொழி அறிஞரும், நிறைந்த பண்புடையவரும், கனிந்த சொல்லுடையவரும் ஆகிய சான்றோர் ஒருவரை இழந்தது, பொதுவாகத் தமிழகத்திற்கும், குறிப்பாகத் திருச்சி நகருக்கும் ஒரு பேரிழப்பு ஆகும்.

புகழுடம்பு

அவரது பொய்யுடல் மறைந்தாலும் புகழுடல் மறைவதற்கில்லை. அவர் கொடை வழங்கிவந்த பல அற நிலையங்களும், தொடங்கிவைந்த பல தொழில் நிலையங்களும், அரியமங்கலத்தில் தோற்றிவைத்த தொழில் நுணுக்கப் பள்ளியும் நிலைத்து நிற்கும்வரை, மேட்டுர் கெமிக்கல்ஸ் உள்ளவரை, ஈரோடு காகித ஆலை உள்ளவரை, அவரது புகழுடம்பு அழியாது. எனினும், அவரது பெயரால் ஒரு பொறிஇயற் கல்லூரியையும் தோற்றிவைக்க வேண்டியது தமிழக மக்களின் நீங்காக் கடமைகளில் ஒன்றாகும்.

ஆறுதல்

“இப்படிப்பட்ட ஒருவர் திருச்சியில் இருப்பதை நான் இவ்வளவு நாள் அறியாமற் போனேனே” என்று அவர் என்னைப்பற்றி பிறரிடம் கூறிய சொற்கள் என் காதில் விழுந்தபொழுதுதான், “இப்படிப்பட்ட ஒருவர் திருச்சி-