பக்கம்:எனது நண்பர்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42  எனது நண்பர்கள்

களுக்குப் பிறகு கல்லூரியில் படிக்காமல் தாமாகவே தனித்துப் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். அது 1915 ஆம் ஆண்டில். இந்நிகழ்ச்சி அக்காலத்தில் பலருக்கு வியப்பை யளித்தது.

எழுத்தாளன் பாரதி

தமிழ் மொழியில் சிறந்த கருத்துக்களை உயர்ந்த நடையில் அழகு பெற அமைத்து, அழுத்தமாக எழுதும் ஆற்றல் ஒரு தனிப்பட்ட முறையாகப் பாரதியாரிடம் அமைந்திருந்தது. அவரது கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வாங்கி வெளியிட்டு வந்த அக்காலப் பத்திரிகைகள் மதுரைச் செந்தமிழ்”, கரந்தை தமிழ்ப் பொழில்,” சென்னைச் செந்தமிழ்ச் செல்வி முதலியன.

பேச்சாளன் பாரதி

வள்ளுவன் வரலாற்றை அறிய புலவர்கள் விரும்பினர். அதற்காக ஒரு பெருங்கடிட்டத்தைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராதரவோடு கூட்டினர். கட்டியவிடம் பச்சையப்பன் கல்லூரி மண்டபம். கட்டிய நாள் 1929ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், 11ஆம் நாளாகும். பேசியவர் சிலர். வெற்றி பெற்றது பாரதியின் பேச்சு. ஒப்பியவர்களில் தலைமை வகித்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இப்பேச்சு புத்தக வடிவில் வெளியிடப் பட்டிருக்கிறது.

கவிஞன் பாரதி

இவர் எழுதிய கவிதைகள் பல. அவற்றுள் முழுவதும் கவிதைகளாக வெளிவந்த நூல்கள் இரண்டு. ஒன்று “மாரிவாயில்”; மற்றொன்று “மங்கலக் குறிஞ்சி பொங்கல் நிகழ்ச்சி.” இக்கவிதைகட்கு என்றும் உயிர் உண்டு.

ஆராய்ச்சியாளன் பாரதி

“சேரர் தாயமுறை” “தசரதன் குறையும், கைகேயி ...நிறையும்,” “சேரர் பேரூர்” என்று தமிழ்மொழியில்