பக்கம்:எனது நண்பர்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  49

நாளையும் கொண்டாடுகின்ற தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அவரை நினைத்து போற்றி வணங்கியாக வேண்டும்.

அவர் ஒரு புலவர் மட்டுமல்ல; புரவலர் ஆகவும் திகழ்ந்தவர். பல புலவர்களுக்குப் பொருளுதவி செய்து மகிழ்ந்தவர். இவரது இல்லம் சென்னை சாந்தோம் கடற்கரையருகில், “கடலகம்” என்ற பெயரில் அழகுற அமைந்து, தமிழ் அன்பர்க்கும், தமிழ் பயில்பவர்க்கும் ஒரு கலைக் கூடமாகவே திகழ்ந்தது.

அவரிடம் வருகிறவர்களுக்கு அவர் சொல்லும் போதனைகளில் “சாதிச் சண்டைகளில், சமயப் பிணக்குகளில், அரசியல் கிளர்ச்சிகளில் தலையிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்கள்’’ என்பதும் ஒன்று. அதுவும் சும்மாவல்ல; காப்பி, தேநீர், பால் அல்லது மோருடன்.

மறைமலையடிகளும், திரு.வி.க. அவர்களும், நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், பொறியியல் வல்லுநர் பா. வே. மாணிக்க நாயகர் அவர்களும், திரு. முதலியார் அவர்களைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுவதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

47 ஆண்டுகளுக்கு முன்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் நமசிவாய முதலியார் அவர்கள் நிகழ்த்திய தலைமை உரையில், “தமிழுக்குத் தெய்வத் தன்மை கற்பித்துப் பலர் சிறப்புக் கூறுகின்றனர். என் உள்ளம் அதை ஒப்புவதில்லை. தமிழுக்கு அதன் சொந்தத் தன்மையினாலேயே பல சிறப்புகள் உள்ளன” என்று கூறினார். இது அக்காலத்தில் உள்ள சைவத் தமிழ்ப் புலவர்கள் சிலருக்கு திரு. முதலியார் நாத்திகரோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. இதையறிந்த பேராசிரியர் அவர்கள், சென்னையில் நடந்த தமிழ்த் திருநாள் கூட்டத்தில், ‘தமிழுக்குத் தெய்வத் தன்மையை வைத்துச் சிறப்புக் கூறுவது தெய்வத்திற்குச் சிறப்புக்

எ.ந.–4