பக்கம்:எனது நண்பர்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 

தமிழவேள்
த. வே. உமாமகேசுவரம் பிள்ளை

மிழவேள் என்று அன்போடு அழைக்கப்படுபவர் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள். தாசில்தார் வேம்பப் பிள்ளையின் தலைமகன்; கரந்தை தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த ராதாகிருஷ்ணப் பிள்ளையின் தமையன். பெற்றோர் இருவரையும் மிக இளமையிலேயே இழந்ததால் அவருடைய சிறிய தந்தையாராலும், சிறிய தாயாராலும் வளர்க்கப் பெற்றவர்கள். தஞ்சைக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து, பின் சட்டக் கல்லூரிக்குச் சென்று பி.எல். பட்டம் பெற்றுத் தஞ்சையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து, நேர்மையாகத் தொழில் செய்து நற்பெயர் பெற்றவர் தமிழவேள். பொய்வழக்குகளை எடுத்து வாதாடுவதில்லை என்ற ஒரு கொள்கையுடையவர். ஆதலால் பல கட்சிக்காரர்கள் அவரிடம் நெருங்க அஞ்சி ஓடிவிடுவதைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அக்காலத்திய தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு என்ற வட்டக் கழக, மாவட்டக் கழக உறுப்பினராக இருந்தும் தஞ்சை மாவட்ட நீதிக் கட்சித் தலைவராக இருந்தும், அவர் புரிந்த பொதுப் பணிகள் மிகப்பல.

அவர் எல்லோரிடத்தும் அன்புள்ளங் கொண்டு மிக அடக்கமாக இனியமொழி புகன்று நட்புப் பாராட்டுவதில் தலைசிறந்தவர். எனினும் சர்.ஏ.டி. பன்னீர் -