பக்கம்:எனது நண்பர்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கி. ஆ. பெ. விசுவநாதம்  59
 அவரது சொற்பொழிவு கேட்போர் உள்ளத்தைக் கிறுகிறுக்கச் செய்யும்.

அவர் ஒரு பரம்பரைத் தமிழ்ப் புலவர், கல்லூரியிற் பயிலாதவர். அவர் ஒரு பட்டதாரியும் அல்லர். இப்போது சிலருக்கு அரசு வழங்கியிருப்பதைப்போல அவருக்கு டாக்டர் பட்டத்தையும் அரசு வழங்கியதில்லை. என்றாலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பெரும் பேராசிரியராக இருந்து தமிழ்ப் பணி புரிந்து வந்தார்.

இன்று தமிழில் டாக்டர் பட்டம் பெற்று தமிழ்ப் பணி புரிகின்ற புலவர்கள் பலர். இவர்களில் பெரும்பான்மையோர் பண்டிதமணி அவர்களிடம் பயின்ற மாணவர்களுடைய மாணவர்கள். அதாவது பேரன் மரபினர்.

அவரது சமயத் தொண்டைப் பற்றியும், தமிழ்த் தொண்டைப் பற்றியும் என்னிடம் பாராட்டிக் கூறிய பெருமக்கள் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரையா அவர்களும், பசுமலை நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் ஆவர். பண்டிதமணி அவர்களைப்பற்றி நானாக அறிந்திருந்ததைவிட, இந்தப் பெருமக்கள் மூலம் அதிகமாக அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எதிர்பாராவிதமாக ஒருநாள் திருச்சியில் கையில் கோலை ஊன்றித் தட்டுத் தடுமாறி என் இல்லத்தின் மெத்தைப் படிகளின் மீது ஏறி என்னைப் பார்க்க வந்த பண்டிதமணி அவர்களைக் கண்டு, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்தேன். பிறகுவந்த செய்தி என்ன? நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என வினவினேன். அதற்கு அவர், “ஒன்றுமில்லை சும்மா பார்த்துப் போகலாம் என்று வந்தேன்” என்றார். பல முறை முயன்றும் அவர் வந்த செய்தியை என்னால்