பக்கம்:எனது நண்பர்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60  எனது நண்பர்கள்

அறிய முடியல்லை. கடைசியாகக் கேட்ட பொழுது சும்மா பார்த்துப் போகலாம் என்றுதான் வந்தேன் என்ற விடையே கிடைத்தது; என்னால் அதை நம்ப முடியவில்லை.

‘ஏதாவது வந்த செய்தியிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்’ என்று நான் கேட்டபொழுது, அவர் சிறிது அழுத்தமாக ஏதாவது வேலையிருந்தால்தான் வரவேண்டுமா? கம்மா வந்து பார்க்கக் கூடாதா?’ என்று என்னையே இரண்டு கேள்விகளைக் கேட்டு, “நான் வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். எனக்கு இது பெரும் வியப்பைத் தந்தது.

பிறகு நானும் அவரோடு கீழே இறங்கி வந்து, “நீங்கள் இங்கேயே இருந்து, வந்த செய்தியை அறிவித்திருக்கலாமே! நான் கீழே வந்து பார்த்து மகிழ்ந்திருப்பேனே” எனக் கூறினேன். “அந்தத் தொந்தரவை உங்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை; நான் புறப்படுகிறேன். வேறு ஏதாவது வேலை இருக்கும்போது திரும்ப வருகிறேன்” என்று நடக்கத் தொடங்கினார். நான் பயந்து போய், அவரைக் கட்டாயப்படுத்தி உட்காரவைத்து, எனது மனைவி மக்களோடு அவரது திருவடிகளில் வணங்கி திருநீறு பெற்று மகிழ்ந்தோம். அந்த, நாள் என் கடைசி மகன் பிறந்த முப்பதாவது நாள்.

பண்டிதமணி அவர்கள் என் இல்லத்திற்கு வந்து சென்றதன் நினைவாக, அவரது திருப்பெயரை என் கடைசி மகனுக்கு வைத்து மகிழ்ந்தோம். இப்போது என் கடைசி மகன் கதிரேசனுக்கு வயது 42.

பண்டிதமணி அவர்கள் எங்களை அன்போடு வாழ்த்தி விட்டுத் திரும்பிச் செல்லுகிற நேரத்தில், இப்பொழுதாவது தாங்கள் வந்த செய்தியை நான் அறியலாமா?” என்று நான் வினவியபொழுது, பண்டிதமணி அவர்கள் ‘என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று,