பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169


பாடிக் கொண்டு வருவது வழக்கம். திருப்பரங்குன்றில் விளங் கும் குகா என்னும் மதுர பாஸ்கரதாஸின் பாடலை என். எஸ். கிருஷ்ணன் மிக நன்றாகப் பாடுவார். அஸ்வபதி மேடைக்கு வரும்போது அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். சபையோர் அன்று இவரை உன்னிப்போடு கவனித்தார்கள்.

எனக்கும் கலைவாணருக்கும் கம்பெனி தொடங்கிய நாளிலிருந்து நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. விளையாட்டு, கதை பேசுதல், எல்லாவற்றிலும் நாங்களிருவரும் இணைந்தே கலந்து கொள்வோம். நான் எப்போதாவது சோர்ந்திருக்கும் நேரத்தில், எனக்குச் சிரிப்பூட்டுவதற்காக ஏதாவது வேடிக்கை செய்வார் அவர். கலைவாணரின் இயற்கையான நகைச்சுவைப் பண்பை அறிந்த நான், நாடகங்களில் எம். ஆர். சாமிநாதன் போட்டு வந்த நகைச்சுவைப் பாத்திரங்களையெல்லாம் நெட்டுருப் போட்டு வைக்கும்படியாக அடிக்கடி அவரிடம் கூறுவதுண்டு.

எம். ஆர். சாமிநாதனிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. எந்தக் குழுவிலும் நிரந்தரமாக் இருக்க மாட்டார். திடீர் திடீரென்று சொல்லாமல் ஒடிப்போய் விடுவார். அப்புறம் திடீரென்று சொல்லாமலே வந்து விடுவார். அவருடைய தங்கை மீனாட்சியும் அப்போது எங்கள் குழுவில் நடித்துக் கொண்டிருந்தாள். அவள்தான் மனோஹரனில் விஜயாளாக நடிப்பாள். அண்ணனும் தங்கையும் ஒருநாள் சொல்லாமல் போய்விட்டார்கள். அன்று மனோஹரன் நாடகம் வைக்கப் பெற்றிருந்தது. விஜயாளாக நடிப்பதற்கு, செல்லம் என்னும் ஒரு பையனை ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்தோம். பைத்தியக்காரன் வசந்தகை யார் நடிப்பதென்பது பெரும் பிரச்னையாய் விட்டது. பழைய நடிகர்கள் யாரும் அப்போது கம்பெனியில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக நான் என். எஸ். கிருஷ்ணனைத் தூண்டினேன். பெரியண்ணாவிடம் போய், “என். எஸ். கிருஷ்ணன் நடிப்பதாகச் சொல்கிறார். அவர் நன்முக நடிப்பாரென்று தோன்றுகிறது” என்றேன். அண்ணா என். எஸ். கே. யைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர் முதலில் அஞ்சினார்; நாங்கள் அனைவரும் உற்சாகப்படுத்தவே ஒப்புக் கொண்டார். அன்று மனோஹரன் நாடகம் சிறப்