பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213


நான் கிருஷ்ணனாக நடிப்பேன். அந்த வேடத்திற்குரிய பாடல்கள் சிலவற்றை, எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்களும் அவர் வீட்டிற்குப் போவதுண்டு. ஒருநாள் எங்கள் தாயாருடன் கொடுமுடியிலுள்ள தமது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். காவேரியில் எல்லோருமாகக் குளித்துவிட்டு, பாடல் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் தென்பாண்டிக் கொடுமுடி ஈஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம். பிறகு அம்மையார் இல்லத்தில் தங்கி விருந்து புசித்தோம். அப்போது அவர் எஸ்.ஜி.கிட்டப்பா ஐயரோடு ஊடல் கொண்டிருந்த இடைக் காலம். அவரது இல்லத்தில் கிட்டப்பா ஐயருடன் அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் என்னிடம் காண்பித்துத் தமது குறைகளையெல்லாம் கதை கதையாகச் சொன்னார். எங்கள் தாயாருக்கு, கே. பி. எஸ். மீது அதிகமான பற்றுதல் ஏற்பட்டிருந்தது. கரூருக்குப் போகும் பொழுதெல்லாம் நாங்கள் சுந்தராம்பாள் அம்மையார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதில்லை.

மேனகா அரங்கேற்றம்

கரூர் முடிந்து, வேறு பல ஊர்களுக்குச் சென்றபின் மதுரைக்கு வந்தோம். மீண்டும் வாத்தியார் கந்தசாமி தமது முதலியார், புதல்வரோடு வந்து சேர்ந்தார். இம்முறை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் அருமையான நாவலை, நாடகமாகத் தயாரித்தார். திருநெல்வேலி யிலிருந்தபோது பாடம் கொடுக்கப்பெற்றது. - நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மேனகா, தம்பி பகவதி வராகசாமியாகவும், எம். கே. ராதா டிப்டிக் கலெக்டர் சாம்பசிவமாகவும், என். எஸ். கிருஷ்ணன் சாமா ஐயராகவும் நடிக்க ஏற்பாடாயிற்று. மேனகாவில் நான் நைனமுகமதுவாகவும், தாசி கமலமாகவும் ஒரே சமயத்தில் இரு வேடங்களில் நடித்தேன். பெண்வேடம் புனைபவர்கள் அப்போது கம்பெனியில் பலர் இருந்தார்கள். என்றாலும், தாசி கமலம் நான்தான் நடிக்கவேண்டு மென்று வாத்தியாரும் கலைவாணரும் விரும்பினார்கள். வேறு வழி யின்றி நான் அதை ஏற்றுக் கொண்டேன். மேனகாவுக்கு ஏராளமான பொருள் செலவு செய்து காட்சிகளையும், உடைகளையும்