பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282


பாடுவேன். பாடுகிற எனக்கே உடல் புல்லரிக்கும். பாடல் முடியும்போது பெருத்த கைதட்டல் விழும். அந்தப் பாட்டு இது.


“புற்றில்வாழ் அரவுக் கஞ்சோம்
பொய்யர்தம் மெய்யுக் கஞ்சோம்
விற்றொழில் வேந்தர்க் கஞ்சோம்
வெஞ்சிறை வாழ்வுக் கஞ்சோம்
கொற்றொழில் பீரங் கிக்கும்
கொடும்பணத் திமிர்க்கு மஞ்சோம்
பற்றிலா ஏழை கண்ணீர்
பார்க்கநாம் அஞ்சு வோமே!

இந்தப் பாட்டு அந்த நாளில் பம்பாய் மெயில் நாடகத்தின் தரத்தையே உயர்த்தியது.

கையெழுத்துப் பத்திரிகை

ஈரோடு முடிந்ததும் சேலம், ஆத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றோம். ஆத்தூரில் பம்பாய் மெயில் நாடகத்திற்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. பகல் நேரங்களில் எங்களுக்கு நிறைய ஒய்வுண்டு. அதைப் பயனுள்ள வழியில் செலவழிக்க விரும்பினேன். கையெழுத்துப் பத்திரிகையொன்று தொடங்கத் திட்டமிட்டேன். சில நடிக நண்பர்கள் என் யோசனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

9.12-34 இல் அறிவுச்சுடர் என்னும்பெயருடன் கையெழுத்துப் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளி வந்தது. நடிகர்களும் ஏனைய தொழிலாளர்களும் புனைபெயரில் கட்டுரை எழுதி என்னிடம் ரகசியமாகக் கொடுத்து விடுவார்கள். நான் அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி, பத்திரிகை முழுவதையும் என்கையாலேயே எழுதுவேன். கதை, கட்டுரை, அரசியல் சமுதாயச் சீர்திருத்தம் விகடத் துணுக்குகள், அந்தரத் தபால்கள், திருக்குறள் விளக்கம் இவற்றுடன் நாடக சம்மந்தமான அறிவுரைகளும் அறிவுச்சுடரில் இடம் பெற்றன. நடிகர்கள் உற்சாகத்தோடு எழுதினார்கள். புனைபெயர்களில் எழுதுபவர்களின் உண்மைப் பெயர்களை நான் ஒருவரிடமும் சொல்வதில்லை. எனவே எழுதுபவர்கள் யாரென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். வாரந்தோறும் ஞாயிறன்று தவறாமல் பத்திரிகையை வெளி