பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288


ஜீவா சொற்பொழிவு

தோழர் ஜீவானந்தம் அப்போது நீலகிரியில் வந்து தங்கி யிருந்தார். அவரும் நானும் தனியே அமர்ந்து பல்வேறு விஷயங் களைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். கம்பெனியின் கஷ்டமான நிலையைப்பற்றி நான் அடிக்கடி வேதனைப்படுவேன். அப்போ தெல்லாம் ஜீவானந்தம் எனக்கு ஆறுதல் கூறித் தேற்றுவார். ஒரு நாள் சமூகச் சீர்திருத்த சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் நடை பெறுவதாகக் கூறி, என்னையும் தம்பி பகவதியையும் அழைத்துச் சென்றார். கூட்டம் ஒரு வீட்டில் நடந்தது. அந்த வீட்டின் முன் புறக் கூடத்தில் சுமார் ஐம்பதுபேர் உட்கார இடமிருந்தது. ஆனால் வந்திருந்தவர்கள் ஐந்தே பேர்கள்தாம். ஜீவானந்தம், தோழர் ஆர். கிஸன், அவரது மனைவி, நான், பகவதி-எங்களைத் தவிர யாருமே வரவில்லை. நான் ஜீவாவைப் பார்த்துச் சிரித்தேன். அவர் அதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தோன்றவில்லை. என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். பாட்டு முடிந்ததும் ஜீவா பேசத் தொடங்கினார். அவருடைய கர்ஜனையைக் கேட்டு, மற்றும் நான்கு பேர் வந்து உட்கார்ந்தார்கள். ஆகச்சொற்பொழிவாளர் உட்பட ஒன்பது பேர். இந்த மாபெரும் கூட்டத்தில் தோழர் ஜீவா, சமுக சீர்திருத்தத்தைப் பற்றி ஒன்றரை மணி நேரம் ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். அவருடைய நெஞ்சுத் துணிவை நான் பாராட்டினேன்.

ஒடிவிடத் தீர்மானித்தேன்

நாடகம் தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் பம்பாய் மெயில் நாடகம். சுந்தரம் கிணற்றுக்குள்ளிருந்து தன் தம்பி கோபலனத் தூக்கி வரும் காட்சியில் இருவரும் மேலே தண்ணீரை ஊற்றிக்கொள்ள வேண்டும். நான் வெந்நீர் வேண்டு மென்று கேட்டிருந்தேன். ஆனால், காட்சியில் நான் கிணற்றி லிருந்து குதித்தபோது கீழே புதைக்கப்பட்டிருந்த டிரம்மிள் ஜில்லென்ற தண்ணிர் தான் இருந்தது. கால்களெல்லாம் வெட வெடவென்று நடுங்குவதுபோல் நடிக்க வேண்டும். ஆனால் இப்போது உண்மையாகவே கைகால்கள் நடுங்கின. சுந்தரம் கிணற்றில் குதித்ததும் கிணற்றின் மேற்புறத்தைப் பெரிய