பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


கீழே விழுந்தார்

மறுநாள் எடுத்த காட்சியில் ஒரு ரசமான கட்டம். கதையின்படி நைன முகம்மது ஐயாயிரம் கொடுத்து மேனகாவைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விடுகிறான். அவள் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பி வெளியே ஒடுகினாள். நைனமுகம்மது வழி மறித்து அவளைத் துக்கிக் கொண்டு கட்டிலை நோக்கிச் செல்கிறான். இப்படித் தூக்கிக் கொண்டு செல்வது எங்கள் நாடகக் கதையிலோ, வடுவூராரின் நாவலிலோ இல்லாத சம்பவம். டைரக்டர் ராஜாவின் சொந்தக் கற்பனை. தூக்கிக் கொண்டு போவது வேண்டாமென்று நான் ராஜாவிடம் எவ்வளவோ வாதாடிப் பார்த்தேன். ராஜா சாண்டோ அலட்சியமாக,

“போடா, ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுத் தொட்டுத் தொந்தரவு பண்ணாமல் விட்டு விடுவானா?” என்றார்.

என்னைப்போலவே விஜயாளும் தகராறு செய்தார். ராஜா பிடிவாதமாய் இருக்கவே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு ஒத்திகை நடைபெறவில்லை. ‘டேக்’ என்று காமிராவை முடுக்கியதும் விஜயாள் ஓடினார். நான் வழி மறித்து அவரைத் தூக்கினேன். இயற்கையாக நடிப்பதானால் நான் அவரைக் கொஞ்சம் இறுகப் பிடித்து அணைத்தபடி இருந்திருக்கவேண்டும். முதல் நாள் சம்பவம் என் நினைவில் இருந்ததால் நான் அவரை அப்படியே எடுத்துக் கைகளில் தாங்கிய வண்ணம் கட்டிலை நோக்கிச் சென்றேன். விஜயாள் என் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயல்பவரைப்போல் கைகால்களை உதறிக் கொண்டார். நான் அவரை மார்போடு தழுவி அணைத்துக் கொள்ளாததால் எனது பிடியிலிருந்து விடுபட்டுத் தொப்பென்று கீழே விழுந்து விட்டார். எல்லோரும் சிரித்து விட்டார்கள். ராஜாவும் கலகல வென்று சிரித்து, “நல்லாக் கட்டிப்பிடிடா” என்றார். ஆனால் விஜயாள் அதை இரண்டாம் முறை படம் எடுக்க அனுமதிக்கவில்லை. பெருத்த சண்டைக்குப் பின், “சரி, வேண்டாம்” என்று ராஜாவும் விட்டு விட்டார். படம் திரையிடப்பட்ட போது நான் தூக்கிச்