பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைஞர் ஏ.பி. நாகராஜன்

காரைக்குடியில் சேலம் தேவாங்கா அச்சகத்தைச் சேர்ந்த நண்பர் சங்கரன் மூலம் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் கம்பெனியில் சேர்க்கப் பெற்றான். பெண் வேடத்திற்குரிய நல்ல தோற்றமும் இனிமையான குரலும் அவனிடம் அமைந்திருந்தன. வந்த சில நாட்களில் காரைக்குடியிலேயே அவன் இராமாயணத்தில் பால சீதையாக அரங்கேறி விட்டான். அவனுடைய நடிப்பிலே நல்ல மெருகும் புதுமையும் இருந்தன. அச்சிறுவனை நான் பிரத்தியேகமாகக் கவனிக்கத் தொடங்கினேன். அப்போது நடந்து வந்த நாடகங்களில் முக்கிய பெண் பாத்திரங்களையெல்லாம் அச்சிறுவனுக்குக் கொடுக்கச் செய்தேன். பம்பாய் மெயில் நாடகத்தில் கதாநாயகன் சுந்தரத்தின் காதலி பார்வதியாக ஒரு நாள் திடீரென்று அவன் நடிக்க நேர்ந்தது. புதிதாய் நடிப்பதாகவே தோன்றவில்லை. நீண்ட காலம் அனுபவம்பெற்ற நடிகனைப் போல் பிரமாதமாக நடித்தான். நாடகத்தின் நடுவே ஒரு சுவை யான காதல் காட்சி. பம்பாய் மெயிலாகவும், சுந்தரமாகவும் நான் தான் நடித்தேன். என் காதலி பார்வதியோடு சல்லாபமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார். நாணிக் கோணிக்கொண்டு உள்ளே போக முயல்கிறாள் பார்வதி . நான் அவளைப் போக விடாமல் குறும்பாக அவள் சடை நுனியைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறேன். இந்தக் காட்சி நடந்தது. பார்வதி போகும்போது நான் சிரித்துக் கொண்டே சடைப் பின்னலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான். சடை என் கையோடு வந்துவிட்டது. என் காதலி பார்வதி ஒரு சாண் நீளமுள்ள தலைமுடியுடன் உள்ளே ஓடிவிட்டாள். அந்த நாளில் பெண்வேடம் புனைபவர்கள் அனைவரும் கூந்தலை வளர்க்க வேண்டும், பார்வதியாக நடித்த அந்தச் சிறுவனுக்கு முடி