பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

531


ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்

பகல் நேரங்களில் பில்ஹணன் படப்பிடிப்புக்குத் தலைவர் அடிக்கடி என்னோடு வந்தார். அங்கும் இலக்கியப் பேச்சுத்தான். வ்ந்த இடத்தில் வேடிக்கையாக படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாமல்லவா? ஸ்டூடியோவுக்குள் வந்தும் அங்கு நடைபெறும் வினோதங்களைப் பார்க்காமல் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. 9.12.47 இல் நடைபெற்ற முள்ளில் ரோஜா முதல் நாடகத்திற்கும் ம. பொ. சி தலைமை தாங்கினார். நாடாகாசிரியர் ப.நீலகண்டன் அவர்களை மனமாரப் பாராட்டினார். அன்று காலை கோவைக்கு அருகிலுள்ள பேரூருக்குச் சென்றிருந்தோம். ஆலயத்திலுள்ள அழகிய சிற்பங்களைக் கண்டு ம. பொ. சி. அதிசயப்பட்டார். தலைவர் எங்களோடு தங்கியிருந்த பதினேந்துநாட்களும் எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. எங்கள் பெரியண்ணா திரு டி.கே.சங்கரன் ஒர் அதிசய மனிதர் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். ஒழுக்கத்தின் உறைவிடம் அவர். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். அவரை எப்படியோ கவர்ந்து விட்டார் தலைவர் டி. பொ. சி. ஒய்வு நேரங்களில் தலைவரும் பெரியண்ணாவும் தனியேயிருந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். 10. 12. 47இல் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு சிலம்புச் செல்வர் சென்னைக்குப் புறப்பட்டபோது எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருந்தது அவர் தங்கயிருந்த நாட்களில் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் நட்புறவு மேலும் வளர்ந்தது.

உயிரோவியம் அரங்கேற்றம்

திரு. நாரணதுரைக்கண்ணன் அவர்கள் திருச்சிக்கு ஒளவயா ரைப் பார்க்க வந்திருந்தபொழுதே அவரது உயிரோவியம் நாவலை நாடகமாக்கித் தர வேண்டினோம். கோவை முகாமில் நாடகத்துக் கான காட்சிகளுக்குக் குறிப்புகள் எடுத்தோம். நாடகத்தை உயரியமுறையில் அமைத்துத்தந்தார் ஆசிரியர். கவினார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி உயிரோவியத்திற்கான பாடல்களை எழுதினார். உயிரோவியத்தைப் பற்றிய பல்வேறு சிறப்புக்களை இரண்டாவது பாகத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமெனக் கருது