பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

548


தமிழ் நாடக நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. ஆனால், மேடையில் நாடக இலக்கியம் பிறமாகாணங்களை விடப்பெருமைப் படத்தக்க விதத்தில் வளர்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. படவுலகைவிட இன்று நாடக உலகம்தான் மக்களுக்குப் பயன்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை, சினிமா, நாடகத்தைவிட விரைவான பிரசாரக் கருவி என்பது உண்மையேயானலும் இன்று சினிமாவின் நிலை மக்களின் ஒழுக் கத்தைக் கெடுப்பதாய்த்தானிருக்கிறது. நமது கலைவாணரைப் போன்ற ஒருசிலர்தான் வருவாயை மதியாது வாழ்வை முன்னிலை படுத்திக் கலை வளர்க்க முடியும். தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிக்கும், சந்திரலேகாவுக்கும் மக்கள் காட்டும் ஆதரவைப் பார்த்த பிறகும்கூட நல்லதம்பியைப் போன்ற கதைகளைப் படம் பிடிக்க அபாரத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

பொதுவாக படப்பிடிப்பாளர்களிடம் பயன் தரும் கதை. களை எதிர்பார்ப்பதில் பயனில்லை. படங்கள் பெரும் பொருட். செலவில் தயாரிக்கப்படுவதால் அவர்கள் அதிக வருவாயை எதிர் பார்த்து பொது ஜனங்கள் விரும்பும் அம்சங்கள் என்னென்ன என்பதைத் துருவித்துருவி ஆராய்ந்து அவ்வழியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாடகக் கம்பெனிகள் அவர்களைப் பின்பற்றவில்லை, ஓரள வுக்கு வருவாய் அவசியமென்றாலும் மக்களுக்குப் பயன் தரும் நாடகங்களை நடித்துப் புகழ் பெறவேண்டுமென்ற லட்சியத்துடன் தொண்டாற்ற முயல்கின்றன. இந்த வேற்றுமையை கவனித்துப் பத்திரிகைகள் தமது ஆதரவைக் காட்டவேண்டும். சமூக முன்னைற்ற நாடகங்களுக்குப் பத்திரிக்கைகள் அதிக ஆதரவளிக்க வேணடும்.

வார மலர்கள் வெளியிடும் தினசரிகள் நாடகச்செய்தி களுக்கும் விமர்சனங்களுக்கும் பக்கங்கள் ஒதுக்க வேண்டும். நாடக வளர்ச்சியை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பம்பாய், டில்லி மாகாணங்களில் நடிகர் “பிரதிவிராஜ்” அவர்களின் பிரசார நாடகங்கள் சிலவற்றிக்கு தமாஷா வரி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருந்ததை ஒரு வாரத்திற்கு முன் நமது தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தேன். அத்தகைய பிரசார நாடகங்கள் தமிழ் நாட்டில் நடைபெருமலில்லை; நடைபெறு