பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

552


மீண்டும் பெரியண்ணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அக்கடிதத்தை அவர் பார்க்க விரும்பவில்லை. சகோதர பாசத்திற்கும் காதல் பாசத்திற்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அன்றிரவு முழுதும் நானும் சீதாவும் சிந்தனை செய்தோம். காதல் கதைகளில் வருவது போல எத்தனையோ முடிவுகள் எனக்குத் தோன்றின. சீதா உறுதியாகக் கூறிவிட்டாள். “நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அந்த முடிவை நானும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்” என்று.

வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே? பெரியண்ணா மீது எனக்குக் கோபம் உண்டாகவில்லை; வருத்தமும் ஏற்படவில்லை. அவர் முடிவு செய்தது சரியென்றே என் மனத்திலும் பட்டது. விளைவுகளை ஏற்பது தான் ஆண்மை என்ற முடிவுக்கு நானும் வந்தேன்; நான் இந்த முடிவுக்கு வர, காலை ஐந்துமணி ஆயிற்று. அதற்குமேல் சிந்தனை எதுவுமில்லை. அமைதியாக உறங்கினேன்.

காலை 8 மணிக்கு எழுந்தேன். மீண்டும் சிந்தனை “சாவு ஒன்று தான் எங்களைப் பிரிக்க முடியும்” என்று ஒரு சமயம் நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். இப்போது உயிருடன் இருக்கும் போதே பிரிகிறோமே என்று எண்ணினேன்.

காதலயைக் கைப்பிடித்தேன்

1948 மார்ச்சு 31 ஆம் நாள், நான் மறக்க முடியாத நாள். ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உயிராகப்போற்றும் எங்கள் பெரியண்ணா கம்பெனியை நடிகர்களின் கூட்டு நிர்வாகத்தில் நடத்தும்படி யோசனை கூறிவிட்டு நிரந்தரமாக ஊருக்குப் புறப் பட்டு விட்டார்..........

..................................................................................

நான் என் இதயத்தை இரும்பாக்கிக் கொண்டேன். ஜூன் மாதம் முதல் தேதி சின்னண்ணா என்னை அழைப்பதாகத் தகவல் வந்தது. சென்றேன். நானும் சின்னண்ணாவும் தம்பி பகவதியும் கலந்து யோசித்தோம் கம்பெனியைத் தொழிலாளர் கூட்டுறவில் விடுவதென்றும், கம்பெனி கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜுவையும் நீண்ட காலமாக வெளி நிர்வாகத்தில் எல்லாக் காரியங்களையும் கவனித்து வரும் பழம் பெரும் நடிகர் கொல்லம் பாலகிருஷ்ண