பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


சிவகங்கையில் வேறு வீடு கிடைக்காமையால் நாடகம் முடியும்வரை அந்தப் பேய் வீட்டிலேயே இருந்து காலம் தள்ளினார்கள்.

சுவாமிகளின் உறுதி

சிவகங்கையில் நாடகங்களுக்கு மற்ற ஊர்களைவிட அதிக மான வசூல். ஜமீன்தாரும் அடிக்கடி நாடகம் பார்த்து வந்தார். ஒருநாள் சதியனுசூயா நாடகத்தன்று ஜமீன்தார் வந்திருந்த பொது நடிகர்கள் சிலருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கர தாஸ் சுவாமிகளுக்கும். ஒரு பரிசு .ெ கா டு க் க விரும்பினார் ஜமீன்தார். சுவாமிகளை மேடைக்கு அழைத்தார்கள். சுவாமிகள் எப்போதுமே மேடைக்கு வருவது வழக்கமில்லை. ஜமீன்தார் தமது திவான உள்ளே அனுப்பி சுவாமிகளை மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். திவான் வந்து சொல்லிய பிறகுங்கூட சுவாமிகள் பிடிவாதமாக மேடைக்கு வர மறுத்துவிட்டது எனக்கு நன்முக நினைவிருக்கிறது.

புகழ்பாட மறுத்தல்

நாங்கள் சிவகங்கைக்கு வருமுன் மதுரையிலிருந்தபோது இதைப் போலவே மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அக்காலத்தில் தமிழறினார்களேயும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றி வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் அவர்கள், சுவாமி களைக் காண விரும்பினார். மன்னருடைய அரண்மனை நிர்வாகி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும் இல்லையே! சுவாமிகள்மட்டும் ஏன் இன்னும் மன்னார்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினல் தங்களுக்குக் கனகாபிஷேகம் செய்வாரே மன்னார்!” என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்துபாடு வதில்லையென்று நோன்புகொண்டவர். ஆதலால் மன்னார்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பல அன்பர்கள் வந்து இதுபற்றி வற்புறுத்தினார்கள். சுவாமிகள் சினம் கொண்டு, நானும் மறவன் மன்னனும் மறவன் என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன் எதற்காக நான்