பக்கம்:எனது பூங்கா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கல்வி



இது மட்டுமா, அப்பா நீங்கள் நகைகள் வேண்டாம் என்று கூறுகிறீர்களே, நம்முடைய பக்கத்து வீட்டுப் பெண்களைப் பாருங்கள். அவர்கள் நகைகளை அணிய வில்லையா ? அவர்களுடைய தந்தைமார் எம். ஏ. முதலிய பெரிய படிப்புப் படித்தவர்கள் அல்லவா? அவர்கட்கு இந்த விஷயம் தெரியாதா ? நீங்கள் மட்டும் இப்படிக் கூறுகிறீர்களே என்றும் நம்முடைய பெண்கள் கேட்கிறார்கள். இவர்களுக்கு நாம் என்ன விடைகூறமுடியும். ஆமாம் உலகமுழுவதிலும் இவ்விதமே சுழல்வதால் நமக்குத்தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அன்பர்கள் தான் பைக்தியம் யாருக்கு என்று முடிவு செய்ய வேண்டும்.

நம்முடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் வீட்டு விஞ்ஞானம் என்னும் பாடம் ஒன்றும் கற்றுத்தருகிறார்கள். அது வெகு முக்கியமான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. அதைக்கற்றுக்கொடுக்க எண்ணிய ஆசிரியர்களுக்கு வந்தனம் அளிக்கிறேன். வீடுகளை எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்வதுபோன்ற விஷயங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமாக உள்ளவை. அவற்றோடு சேர்த்து அஸ்திவாரத்திற்கு அஸ்திவாரமாகவுள்ள சமையல் கலையையும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தக் கலையை பெண்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தால் போதுமா, ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டாமா ? சரி அது போகட்டும் பெண்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்களே, அந்தக் கலையில் எதைக் கற்றுக்கொடுக்கிறார்கள் ? சோறு ஆக்கக் கற்றுக்கொடுக்கிறார்களா ? நோயாளிகளுக்குக் கஞ்சி காய்ச்சக் கற்றுக்கொடுக்கிறார்களா ? காய்கறியி

—104—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/106&oldid=1392264" இலிருந்து மீள்விக்கப்பட்டது