பக்கம்:எனது பூங்கா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா சிறுகுழந்தைகளுக்குக் கோழிகளைப் பார்க்கும்பொழுது அழ குணர்ச்சியைத்தவிர வேறுஉணர்ச்சி கிடையாது. இன்னும் அவர்களுக்கு முட்டையைப்பற்றிய ஆசை உண்டாகவில்லை. அதல்ை குழந்தைகளிடம் எது அழகு, சேவலா? பெட் டைக்கோழியா? என்று கேட்டால் அப்பா சேவல்தான் அழகு. அதன் கொண்டையைப் பார், எவ்வளவு அழகா யிருக்கிறது" என்று கூறும், - அப்படியே சகல ஜீவராசிகளையும் ஆராய்ந்தால் ஆண் தான் அழகாக இருக்கக் காண்போம். சாதாரணமாக நம் முடைய வீடுகளில் சற்றும் பயமின்றி வந்து கூடுகள் கட்டு கின்றனவே சிட்டுக்குருவிகள். அவற்றுள் எது அழகு...... ஆளு. பெண்ணு ? பெண் ஒரே தவிட்டுநிறம். பெண்குருவி யைச் சிறிய பெட்டைக் கோழி என்றும் பெட்டைக் கோழி யைப் பெரிய குருவி என்றும் கூறிவிடலாம். இப்படி அழ கற்ற தன்மையில் இரண்டும் சமானமாக இருப்பதைக் காணலாம். ஆனல் ஆண் குருவியோ நிறத்திலும் வேறு. கழுத்தில்காணப்படும் வெண்மை கருமையிலும்வேறு. ஆண் குருவியைத்தான் அழகு என்று எல்லோரும் கூறுகிரு.ர்கள். மயில் பார்த்திருக்கிருேம். அதில் எது அழகு? அரை கிமிஷம் கூடக் காத்திருக்க வேண்டாம். உடனே பதில் வந்து விடும் ஆண்தான் என்று. அதில் சந்தேகமே கிடை யாது. ஆண்தான் அழகு. பெண் அழகேயில்லை என்று கூடக் கூறி விடலாம். இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்கு முள்ள தூரமுண்டு. பட்சிகள் வேண்டாம். மிருகங்களைப் பார்த்தாலும் . ஆண்தான் அழகு என்ற உண்மை விளங்கும். நம்மோடு -- 13?--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/139&oldid=759333" இலிருந்து மீள்விக்கப்பட்டது