பக்கம்:எனது பூங்கா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. எனது நண்பர்கள்

    'செயற்கரிய யாவுள நட்பின், அதுபோல் 
     வினைக்கரிய யாவுள காப்பு '
 என்று தமிழர் அறிவின் சிகரமாகிய திருக்குறள் நட் பைச் சிறப்பித்துக் கூறுகின்றது. உலகில் நட்பே தேடற் கரிய செல்வம். அதைப் போன்ற பாதுகாவல் மனிதர்க்கு வேறு கிடையாது. ஆதலால் எனக்கு நண்பர் விஷயத்தில் அக்கரை அதிகம். ஆனால் பிறர் தம் நண்பர்களை வெளி யிலே போய்த் தேடவேண்டியதுபோல் நான் தேடவேண்டி யது இல்லை. நான் கூறப்போகும் நண்பர்கள் அனைவரும், நான் தேடிப் போகாமலே, என் தயவை நாடி என்னிடம் வந்து என் நட்பை விரும்பிப் பெற்றவர்களே. என்ளனோடு சம்பாவிக்க விரும்பி, என் அன்பை எதிர்பார்த்து, என் வாசலில் காத்திருப்போர் எத்தனையோ பேர்! 
 எனது சிநேகிதர் சாதாரணமானவரல்லர்; எல்லோ ராலும் பெரிதும் மதிக்கப்பெற்ற பெரியோரே யாவர். யாரிடம் கூறினாலும், 'இவர்கள் நட்பு எங்கட்கும் வேண் டுமே !' என்று விரும்பி நிற்பர் என்பதில் சந்தேகமில்லை. எனது நண்பர்களை நான் சிறப்பித்துக் கூறுவது தவறா குமா ? தற்பெருமை தவறு. தன்னை வியவாமையே சிறப்பு

—32–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/32&oldid=1299470" இலிருந்து மீள்விக்கப்பட்டது