பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 97

எந்திரப் படகு கள்தாம்
       இடறியே கிழித்துச் செல்லும்
மந்திரம் மாயம் கொல்லோ
       வானவர் தானம் கொல்லோ
சந்திரன் ஒளிவெள் ளம்தான்
       தரையினில் இறங்கும் கொல்லோ!
விந்தைவெள் ளிக்குன் றங்கள்
       உருகியே விடுவார் யாரோ! (2)

ஆயிரம் கோடிக் கொல்லர்
       அமர்ந்தொன்றாய் உருக்க வெள்ளிப்
பாயிருந் தூசி வெண்மை
       படர்ந்தொன்றாய் வந்த தைப்போல்
போயதைத் தகர்க்கும் ஓடம்
       புகவிடா வகைநீர்த் திவலை
சாயவே இறைக்கும் அள்ளித்
       தண்ணீரைத் தெளிக்கு மாதோ (3)

பலஅடித் தூரம் யாமும்
       பார்க்கின்ற ஆவ லாலே
நலமுறச் செல்லும் போதே
       நயாகரா மேகத் தூரல்
சலசலப் பாக ஆர்க்கும்
       காவலாய்க் கொண்ட சட்டை
சலசல வென்றி ரைக்கும்
       சாரலால் நனையும் நீரால்! (4)

ஓடிடும் படகின் கூம்பில்
       உயிர்ப்புற நின்று பார்த்தோம்
கூடிடும் அருவிச் சாரல்
       கொணர்ந்திடும் நீரி ரைச்சல்
பாடிடும் கீதம் கேட்டோம்
       பனிபோலக் குளிரி ரைச்சல்
சாடிடும் உறையோ தாங்கும்

       தண்முகம் இரைக்கும் சாரல்! (5)