பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ♦ என் அமெரிக்கப் பயணம்

மலர்ந்தன வெண்மே கங்கள்
      மலர்ந்தன மகிழ்ச்சி வெள்ளம்
மலர்ந்தனள் இயற்கை அன்னை
      மதிபோதாய் இருந்த எண்ணம்
மலர்த்தின ஆவல் உள்ளம்
      மாபெரும் நயாக ராவில்
மலர்ந்தபன் னீரின் பூக்கள்
      மல்கிடும் வியப்பு என்னே! (6)

எதிர்நோக்கி வீழி ரைச்சல்
      எம்செவி புகுந்து மீட்டும்
கதிகூட்டும் இன்பம் தாக்க
      தூயவெண் ணகைமுத் தங்கொள்
நிதித்திவலைகள் மேலே
      நீர்த்திவ லையாய் வீழ
குதித்தெழுந் தேவீழ் ஓடம்
      குறிவைக்கும் எழும்மேல் கீழாய்! (7)

சுற்றிலும் வெண்மைப் பஞ்சு
      சூழ்பொதி வானில் தங்கி
கற்றைகற் றையாய் நீரைக்
      கணக்கின்றி இறைத்த லைப்போல்
முற்றிலும் இறைக்கும் வானில்
      முன்னேறத் துடிவான் ஊர்திப்
பற்றினைப் போலே ஓடம்
      பாய்ந்தெழும் வீழும் கண்டாய்! (8)

எங்கிருந் தடடா! இந்த
      இணையிலா வெள்ளம் ஒன்றாய்
பொங்கியே வந்த தோ?ஆ!
      பூரித்தேன் வான லோகக்
கங்கையாள் பெருக்கோ? இல்லை
      கடல்சேர்ந்து விழும்பெருக்கோ?
தொங்குவான் முகில்பெருக்கோ?

      .........................(9)