பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை 139

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - குறள் 517 என்பதற்கிணங்க தமிழார்வம் மிக்க திரு. பாலா. சுவாமிநாதனிடம் பொறுப்பைத் தந்து ஏற்பாடு செய்தமையால் கூட்டம் சிறப்பாக அமைந்தது. அவள் இல்லத்திலிருந்து 15 கல் தொலைவிலுள்ள பிளானோ என்ற நகரில் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்தாள்.

மெட்ரோ பிலெக்ஸ் தமிழ்ச் சங்கம்': இந்தத் தமிழ்ச் சங்கம் பிளோனோ என்ற நகரில் உள்ளது. டாலஸிலுள்ள என் பேத்தி மிருனாளினி இல்லத்திலிருந்து சுமார் 15 கல் தொலைவிலுள்ளது.இச் சங்கக் கூட்டம் 2002ஆம் ஆண்டு மே 2-ந் தேதி நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் 1% மணி நேரத்திற்கு மட்டிலும் தான் இசைவு வழங்கப் பெற்றிருந்தது. அந்த நேரத்திற்கும் கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. நான் என் மனைவி, பேத்திமார் இருவர், அரவிந்தன் ஆகிய ஐவரும் பிற்பகல் 2.30 மணிக்குப்புறப்பட்டு சரியாக 3.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தோம். (படம் - 56)

சுமார் 30 பேர் கூடியிருந்தனர். கூட்டம் சரியாக 3.30 மணிக்கே தொடங்கப் பெற்றது. வரவேற்புரை நிகழ்த்திய திரு. கமலக் கண்ணன்’ என்பவர் மூன்று மணித்துளிகளில்தம் உரையை முடித்துக் கொண்டார். அடுத்து “வைணவ உரைகளில் கண்ட உளம் உகக்கும் நிகழ்ச்சிகள்” என்ற தலைப்பில் 24 நிகழ்ச்சிகள் மிக்க சுவையாக வழங்கப் பெற்றன.

‘அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெருமக்களே’ என்று விளித்துப் பேசிய பேச்சின் விவரம்:

88 அகவையை எட்டும் நான், மேலுலகத்திற்குப் போகும் நிலையில் உள்ள நான், இப்பொழுது மேல் நாட்டிற்கு வந்து உங்கள் முன் நிற்கின்றேன்.

நீர்வழிப் படுஉம் புணைபோல் முறைவழிப் படுஉம் ஆருயிர்’

என்பது சங்கப் புலவனின் வாக்கு நீர்ப் பிரவாகத்தில் செல்லும் மிதவைக்கு யாதொரு தன்னாற்றலும் இல்லை; பிரவாகம் அதனைத் தன் வழியே இழுத்துச் செல்கிறது. அது செல்லும் வழி மிதவை செல்ல வேண்டியது தான். அது போலவே நாமும் (முறைவழிப் படுஉம் ஆருயிர் முறை - வினை) நம்

1. Metroplex Tamil Sangam 2. Pario

3. இவரும் இவர் துணைவியார் பிரியாவும் 16-05-2002 மாலை 7.15-க்கு சலிட்டன் வுட்

பூங்காவிற்குச் சென்றபோது அறிமுகமானவர்கள் பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்தவர்கள்.

4. புறம்-192'யாதும் ஊரே என்று தொடங்கும் பாட்டில் வருவது கணியன் பூங்குன்றனார் பாடியது.