பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளவை ◆ 149

 (9) ‘ஒதிலும் உன்பேர் அன்றி மற்று ஒதாள்’: இந்த அடியால் தொடங்குவது திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரம் (பெரி. திரு. 2.7 5). இது தாய் பாசுரமாக அமைவது. இதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் இன்சுவை மிக்கது. கண்ணன் பிறந்து வளர்ந்த காலத்தில் ஒர் ஆயமங்கை இடைவிடாமல் கண்ணனையே சிந்தித்துக்கொண்டு காதலில் மூழ்கி இருந்தாள். அது கண்ட அவள் மாமி அந்தச் சிந்தனையை மாற்றி விடக் கருதி ஒரு செயல் செய்தாள். தயிர், நெய், பால் முதலியவற்றை அவளிடம் தந்து விற்று வருமாறு ஏவினாள். அம்மங்கை கண்ணபிரானையன்றி வேறொன்றையும் அறியாதவளாகையால் மாமியின் நிர்பந்தத்திற்காக அப்பொருட்கள் அடங்கிய கூடையைத் தலையில் வைத்துக் கொண்டு தெருவழியே நடந்து செல்லும்போது தயிர்! நெய்! பால்!” என்று பேர் சொல்லி விற்பதைத் தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன் ! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன் ! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று கண்ணன் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அதுபோலவே இப் பரகால நாயகியும் ஒதிலும் உன் போன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள் என்று திருத்தாயார் பேசுகின்றாள்.

(10) அம்மங்கி அம்மாள். இவர் ஆண். வரதாச்சாரி என்பது இவர் இயற்பெயர். ஒருநாள் இவர் இறைவனுக்குப் பாலமுதம் சமர்ப்பிக்கையில் பால் சற்றுச் சூடாக இருந்தமையால் ஊதினார். பெருமாள் ‘அம்மாளோ ?” என்றாராம். அதிலிருந்து இவருக்கு “அம்மங்கி அம்மாள்” என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு. இவர் பற்றிய குறிப்பு “நிலையாளா நின் வணங்க” என்ற திருமங்கையாழ்வார் திருப்பாசுரத்தில் (பெரி. திரு. 3.6 : 9 வருவது.

‘நீயாள, வளையாள மாட்டோமே”

என்ற இறுதியடியில் உள்ளது இக் குறிப்பு. மகள் பாசுரமாக நடைபெறுவது இது விளக்கம் இது அம்மங்கி அம்மாள் என்ற ஆசிரியர் நோயால் வருந்தி இருந்தபோது நஞ்சியரும், நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்க எழுந்தருள்கின்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப்படுவதைக் கண்டு நஞ்சீயர் ‘தேவரீர், சாதாரண - சாமானிய - மனிதரல்லவே, எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணியுள்ளீர்; எம்பெருமான் திருக்குணங்களைச் சொல்லி அநுபவித்தே பொழுதுபோக்கியுள்ளிர்; இப்படியிருக்க தேவரீரையும், மற்றவர்களையும் போலவே எம்பெருமான் கஷ்டப்படுத்துகிறானே!” என்கின்றார். அதற்கு அவர் “நீயாள வளையாள மாட்டோமே” என்பதல்லவா கலியன் (திருமங்கையாழ்வார்) பாசுரம் !