பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 ◆ என் அமெரிக்கப் பயணம்



‘எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால் கிலேசப்பட்டுத்தானே இருக்க வேண்டும்” என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளியபின் நஞ்சியர் நம் பிள்ளையை நோக்கி “பார்த்திரா, இவர் எண்ணத்தை என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்” என்று அருளிச் செய்து மகிழ்ந்தனராம்.

(11) புள்ளம்பூதங்குடியின் இயற்கை வளம்: இது பற்றிய குறிப்பு திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் (பெரி. திரு. 5.6 : 2) வருவது.

பள்ளச் செறுவில் கயலுகளப்
பழனக் கழனி யதனுள்போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்
புள்ளம் பூதங் குடிதானே

என்பன இப்பாசுரத்தின் இறுதியடிகள். இக்குறிப்பு இதில் உள்ளது. இது பட்டரின் நிர்வாகமாக வருவது. முற்காலத்தில் ஆலவாயுடையான் என்ற தமிழன் ஒருவன் பட்டரிடம் வந்து ஒரு வினா விடுத்தான். “பள்ளச் செருவில் கயல்கள்” என்றபோதே அவ்விடத்து வயல்களில் மீன்வளம் வெளிவந்து விட்டது; அப்படி இருக்க “புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்” என்று சொல்லுவது எதற்கு ? மீன் அரிதாக இருந்தாலல்லவா இரை தேட வேண்டும்? மீன்கள் குறைவற்றுக் கிடக்கும்போது தேடிப் பிடிப்பதாகக் கூறுவது பொருந்தாதல்லவா? என்று வினவினான்.இதற்குப் பட்டர் அருளிச் செய்தது.'பிள்ளாய், நீநன்கு கற்றவனாயினும் சொற்போக்கு அறியவில்லை; “பிள்ளைக்கு இரை தேடும்” என்று உள்ளதைக் காண்பாயாக அங்குள்ள மீன்கள் நிலவளத்தாலே தூனும் துலாமும் போலே தடித்திருக்கும்; அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்குப் பிடிக்கமாட்டாவாகையால் உரிய சிறிய மீன்களைத் தேடிப்பிடிக்க வேண்டுமல்லவா?” என்பதாகும்.

இங்கு பட்டரைப்பற்றிச் சில சொற்கள். இவர் கூரத்தாழ்வானின் திருமகன்; சகோதரர் சீராமப் பிள்ளை. இருவரும் இரட்டையர். நம்பெருமாள் வரப்பிரசாதத்தாலே திருவவதரித்த இவருக்குப் பராசரபட்டர், வேத வியாசபட்டர் என்று திருநாமம் சாத்தினார் எம்பெருமானார். கூர்மையான அறிவுடைய இவரைப் பற்றிய உரையில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. அவை பட்டர் நிர்வாகங்கள் என்ற சிறப்புப் பெயரால் தெரிவிக்கப் பெறுவனவாயின. இவர் தம் கூரிய அறிவுக்கு ஒர் எடுத்துக்காட்டு தருவேன். ‘உடம்புருவில் மூன்று ஒன்றாய்” (பெரி.திரு. 2.5:2) என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தில் வரை மீகானில் தடம் பருகும் கருமுகிலை’ என்ற சிறப்புச் சொற்றொடருக்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறுவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளையழகிய