பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 33

பதிகம் கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணிப் பெருமாள் பற்றியது. நாதமுனிகள் உடனே கும்பகோணம் சென்று இப்பதிகத்தை அப்பெருமாள் திருமுன் உளங்கரைந்து ஒதி அவர் இசைவு பெற்று அப்பதிகத்தைப் பாடிய நம்மாழ்வார் பிறந்த திருத்தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கு வருகின்றார். ‘இந்தப் பாசுரங்கள் இருந்தால் வேதத்திற்குள்ள மதிப்பு போய்விடும் என்று கருதி அவை பொறிக்கப்பெற்றுள்ள ஒலைச் சுவடிகள் அனைத்தையும் இவ்வூர்ப் பார்ப்பனர்கள் தண்பொருநையாற்றில் ஒடவிட்டு விட்டனர்” என்று பலரும் ஒரேவிதமாகக் கூறினர். மேலும் உசாவியதில் அவர்கள் “இவ்வூரில் ‘பராங்குசதாசர்’ என்ற நம்மாழ்வாரின் சீடர் ஒருவர் உள்ளார். (பராங்குசர் என்பது நம்மாழ்வாரின் பல திருநாமங்களில் ஒன்று). அவரிடம் நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் தம் குருநாதர்மீது பாடிய பத்துப் பாசுரங்கள் அடங்கிய கண்ணி நுண் சிறுத்தாம்பு’ (முதலாயிரம்-கண்ணிநுண்) என்ற பதிகம் உள்ளது. அவரை நெருங்கி விசாரித்தால் உண்மை தெரியலாம்” என்று தெரிவித்தனர். நாதமுனிகள் அவரிடம் போந்து உசாவ அவர் “ ‘கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பக்தியுடன் ஒர் இலட்சம் தடவை ஒதி உளங்கரைந்தால் ஏதாவது வழிபிறக்கும்” என்று மறுமொழி பகர்ந்தார்.

நாதமுனிகள் சிறந்த யோகி. கண்ணிநுண் சிறுத்தாம்பைப்” பராங்குசதாசரிடம் பெற்ற நாதமுனிகள் அர்ச்சைநிலையிலுள்ள நம்மாழ்வார் திருமுன் யோகத்தில் அமர்ந்து அப்பதிகத்தைப் பலநாட்களில் ஒர் இலட்சம் தடவை ஓதி உளங்கரைந்தார். முனிகளின் பக்தி நிலைக்கு உவந்த ஆழ்வார் தம் அர்ச்சை சமாதி (விக்கிரக நிலையைக் கடந்து உண்மைவடிவை எய்தி, தாம் அருளிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற பிரபந்தங்களையும் ஏனைய ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் இவருக்கு அருளினார். இவற்றைப் பெற்ற நாதமுனிகள் வேதத்தை முனிவர்கள் இருக்கு, யகுர், சாமம், அதர்வணம் என்று நான்காக வகுத்தது போல் இப்பிரபந்தங்களை இசைக்கு ஏற்ற பாசுரங்களை முதலாயிரம், பெரியதிருமொழி, திருவாய்மொழி என்றும், இசைக்கு அடங்காதவற்றை இயற்பா என்றும் ஆக நான்காகத் தொகுத்து வெளியிட்டார். நாதமுனிகள் திருநகரியிலிருந்து காட்டு மன்னார் கோவிலுக்குத் திரும்பியதும் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய மேலை அகத்தார், கீழை அகத்தார் என்பவர்கள் பதிகங்களுக்கு சுரம், தாளம் முதலியவற்றை அமைத்தனர். பிற்காலத்தில் அமுதனார் பாடியருளிய

4. இத்திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும்

இருப்பூர்தி வழியிலுள்ள சீவைகுண்டம் என்னும் திவ்விய தேசத்திற்கருகிலுள்ள மற்றொரு திவ்வியதேசம்.