பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 55

ஏற்படுத்திக்கொண்டு ஏராளமான பேர்கள் அமர்ந்து கொண்டு பேச்சுநிகழ்ச்சிகளைக் கேட்டு அனுபவிக்கலாம். இந்த இடத்தைப் பார்த்த வண்ணம் சுற்றி வருகின்றோம்.

விளையாடும் இடங்கள்: ஒர் இடத்தில் புல்வெளியில் கூடைப்பந்து” விளையாடும் இடத்தைக் கண்டோம். பலர் விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ந்தோம்.

சுற்றி வந்ததால் சோர்வும் வந்துவிட்டது எங்களுக்கு. என்மகன் மெதுவாக கார் இருக்கும் இடத்திற்கு இட்டுக் கொண்டு வந்துவிட்டான். பகல் 1.30க்கு வீடு வந்து சேர்ந்தோம். மத்திய பூங்கா பயணம் எங்கட்கு மகிழ்ச்சியைத் தந்தது மனநிறைவையும் பெற்றோம்.

(4) புராஸ்பெக்ட் பூங்கா': (ஏப்ரல் 21, ஞாயிறு அன்று இப்பூங்காவைக் கானச் சென்றோம்.) இப்பூங்கா நியுயார்க்கின் ஐம்பகுதியில் ஒன்றாகிய புரூக்லினில் உள்ளது. என்மகன் உறைவிடத்திலிருந்து 12 கல் தொலைவிலுள்ளது. முற்பகல் 11 மணிக்குப் புறப்பட்டுச் சென்று பிற்பகல் 1.45 மணிக்குத் திரும்பினோம். (படம் - 11)

இந்தப் பூங்காவின் பரப்பு 520 ஏக்கர் சுற்றளவு கிட்டத்தட்ட 5 மைல். பூங்காவைச் சுற்றிப் பத்தாயிரம் மரங்கள் இருப்பனவாகக் குறிப்பு. பூங்காவில் உள்ள ஏரியின் பரப்பு 60 ஏக்கர். பெரும்பாலும் யூதர்களும் கறுப்பர்களும் வாழும் இடம் இது. எங்கோ ஒருசில வெள்ளையர்களின் வாழிடங்களும் உள்ளன.

நடந்து பார்க்கக் காலில் வலிவு இல்லாததால் காரில் கற்றிப் பார்க்க விழைந்தோம். முன்னர் இசைவு இருந்ததாம்.இப்போது அது மறுக்கப் பெற்றது. ஒரு சிறிய அளவு தொலைவு காரில் சென்று, காரை நிறுத்திவிட்டு நடையாக சிறிது அளவு சுற்றிப் பார்க்க முடிந்தது. ஒரிடத்தில் வட்டரங்குக் காட்சிகள்’ நடைபெற்றுக் கொண்டிருந்து,நுழைவுச் சீட்டுகள் பெறுவதற்கு மக்கள் கூட்டம் கியுவரிசைகளில் நின்று கொண்டு திண்டாடுவதைக் கண்ணுற்றோம்.

பூங்காவில் சில இடங்களில் கலைக் காட்சித்தோப்பு” என்ற விளம்பரப் பலகைகளைப் பார்த்தோம். பீத்தோவன், மூர்’ போன்ற கலைஞர்களின் சிலைகள் ஆங்காங்கு நிறுவப் பெற்றிருந்தன. சில இடங்களில் கூடாரங்கள் போன்ற அமைப்புகளும் இருந்தன. இசை, நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இவை அரங்குகளாகப் பயன்படுத்தப் பெறுவன போலும்.

14. Basketball 1. Prospect Park 2. Circus 3. Consert Grove 4. Beethovan 5. Moore