பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

105

உணரலாகா அத்துணை இருள்செறிந்து அக்காலத்தில், நாகரீகத்தின் நடுநாயகமாய், நல்லாட்சிக்கோர் எடுத்துக்காட்டாய், அறிவொளி வீசும் பெருநாடகப் பெருமையுற்றிருந்தது நம் தமிழ்நாடு.

தமிழ்நாடு, இமயம் முதல் குமரி வரையுள்ள பெருநிலப் பரப்பினைக் கொண்ட பெரு நாடாய் விளங்கிய காலம் உண்டு.

“தென்குமரி வடப்பெருங்கல்
குணகுட கடலா எல்லை”

(மதுரைக் காஞ்சி :70-71)

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடா அது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்”

(புறம்-6)

எனவரும் பாடல் வரிகளை அறிக: வடவெல்லை, விந்தியமாகக் குறைந்தது பின்னர்; இறுதியாக, வேங்கடமும், குமரியும் வடதென் எல்லைகளாக விளங்கிவந்தன பலநூறு ஆண்டுகளாக தொல்காப்பியர் காலத்திலேயே இந்நிலை உண்டாகிவிட்டது என்ப

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”

(தொல். பாயிரம்)

தமிழகம் பண்டு தன்னேரில்லா பெருவளம் பொருந்திய, நாடாய் விளங்கியதனால் தான் தமிழகத்தின் மீது ஆரியர் படையெடுத்து வந்தனர்; கோசர் படையெடுத்து வந்தனர்; வடுகர் வந்தனர்; வம்புமோரியர் வந்தனர்; அவ்வாறு படை-

என்-7