பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

119

திருந்த குடந்தை மாநகரைச் சூழ அமைத்திருந்த அரிய காவற் சிறப்பும், தமிழகத்தின் பேரரசுகளுக்கு எவ்வகையிலும் குறைவுறாத வகையில் அவ்வரசுகளை அடுத்து அரசமைத்து வாழ்ந்திருந்த வேளிர் குலக் குறுநிலத் தலைவர்கள், தங்கள் செல்வத்தைத் குவித்து வைத்திருந்த கொண்கான நாட்டுப்பாழி நகரைச் சூழ அழைத்திருந்த அரிய காவற் சிறப்பும் புலவர் பாராட்டும் பெருமை புடையவாயின

“கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியிலும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறங்இல் யாயே”

அகம்-60

“நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்”

அகம்-258

என்ற அகநானூற்றுத் தொடர்களைக் காண்க.

தமிழகத்துப் பேரூர்களின் அமைப்பு முறையினைப் பழந்தமிழ் இலக்கியங்களின் கண் கொண்டு நோக்குவார்ககு, அவை ஒவ்வொன்றும், அரண் அமைப்பின். இன்றியமையாமையினை உணர்ந்து அமைக்கப் பெற்றுள்ளன என்பது புலனாகும்.

ஒரு நாட்டையும், அந்நாட்டின் தலை நகரையும் சூழ, நீரரண், நிலவரண் மலையரன், காட்டரன் என்ற அரண்கள் நான்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது சாலவும் நன்று என்பதே பழந்தமிழ்ப் பெரியார்கள் கண்ட அரண் அமைப்பு முறையாகும்.