பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

21

நிகழ்ச்சி பொருள் என்றாலும் ஈண்டு உவமை மட்டுமே வெளிப்படையாகக் கூறப்படும்; பொருள் வெளிப்படையாகக் கூறப்படாது. பாட்டில் வரும் கருப்பொருள் நிகழ்ச்சிகளைப் படித்த அளவிலேயே அது பாடிய புலவன், அப்பாட்டில் கூற விரும்பிய அகத்திணைத் தலைவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் எளிதே உய்த்துணர்தற்கு வேண்டிய சொற்களையெல்லாம் பெய்து பாடுதல் வேண்டும்.

“உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிகென
உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்”

என்பது தொல்காப்பியம்.

காதல் மனைவியோடு இல்லறம் மேற்கொண்ட ஒருவன் நாள் சில கழிந்த பின்னர், பரத்தையர் உறவு மேற்கொண்டு மனைவியை மறந்துவிட்டான். கணவனின் இப் பொருந்தா ஒழுக்கத்தை எண்ணி எண்ணி புலம்பினாள் மனைவி. அதனால் அவள் உடல் நலமும் கெட்டது. அவள் உள்ளத் துயரை அவள் தோள் மெலிவு புறத்தார்க்குப் பறைசாற்றியது. அது கண்ட அவள் தோழி “கணவன் தவறே செய்யினும் அதைத் தாங்கிக் கொள்வதே கற்புடைய மகளிர் கடனாகவும், நீ, இவ்வாறு கவலை கொண்டு பிறர் பழிக்க இடம் கொடுப்பது முறையாகாது” என்று அறிவுரை கூறினாள்.

அது கேட்ட அப்பெண் “தோழி! கணவன் எவ்வளவு தான் கொடுமை செய்யினும் அவன் நல்லவன் என்றே நான் எண்ணுகின்றேன். ஆனால் என் தோள்கள். மெலிந்து காட்டி அவன், நல்லன் அல்லன் என்று கூறி விடுகின்றன. என் செய்வேன்” என்று கூறினாள். அவ்வாறு கூறும் நிலையிலும் காதல் கொண்டு கைப்பற்றிய மனைவியையும். காசு ஒன்றே குறியாகும் பாத்தையையும். ஒன்றாகவே மதிக்கும் கணவன் கொடுஞ்செயலைக் கண்டிக்