பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

75

தொட்டவுடனே அதற்குச் சுவையும் கூடிவிடுகிறது; நிறமும் கலந்துவிடுகிறது. அவ்வாறு கூடும் சுவையும், கலக்கும் நிறமும் ஒரே இயல்புடையவை அல்ல. மழைநீர் தொட்ட மண்ணின் இயல்புக்கு ஏற்ப, வேறு வேறு சுவையும் வேறு வேறு நிறமும் வாய்த்துவிடுகின்றன. மழைநீர் தொட்ட மண் செம்மன்னாயின், நீர், செந்நீராகிறது; கருநிறமாயின் நீர் கருநீர் ஆகிறது; மழை தொட்ட மண் உவர்நிலமாயின், மழைநீர், ஒன்றிற்கும் உதவா உவர் நீராகிறது; ஆற்றுப் படுகையாயின், உண்ணத் தெவிட்டாச் சுவைநீர் ஆகிறது. இவ்வாறு சார்ந்த நிலத்தின் நிறம் சுவைகளைத்தான் ஏற்றுக் கொள்கிறதே ஒழிய, அந்நிலத்தின் நிறம் சுவைகளை மாற்றிவிடும் இயல்பு மழை நீருக்கு இல்லை.

இவ்வாறு. மழைநீர் தன்னளவில் நிறமும், சுவையும், பெறாது நிற்பினும், சார்ந்த நிலத்தில் சுவைகளுக்கு ஏற்ப மாறிவிடுவது போலவே, அறிவும், நன்மை தீமைகளை, அது தொடக்கத்தில் பெற்றிருக்கவில்லை எனினும், அது சார்ந்து நிற்கும் இனத்தின் ஈர்ப்பாற்றலுக்கு ஏற்ப நன்மை தீமைகளை ஏற்றுத் திரிந்துவிடும்.

தன்னோடு கலந்துவிட்டார் அறிவைத் தன்வயம் ஆக்கிவிடும் ஆற்றல் இனத்திற்கு இருப்பதாலும், அந்நிலையிலிருந்து மாறி எந்த இனத்தோடு சேர்ந்தாலும் தன் தனித் தன்மையை இழந்துவிடாது பெற்று நிற்கவல்ல ஆற்றலோ, தான்சார்ந்து நிற்கும் இனத்தின் இயல்பைக் கெடுத்துத் தன்வயம் ஆக்கும் ஆற்றலோ, அறிவுக்கு இல்லாததாலும், சார்ந்து நிற்கவேண்டிய இனத்தினைத் தேர்ந்துகொள்வதில் மனிதன் விழிப்பாயிருக்க வேண்டும்.

இது உவர்நிலம் ஆகவே ஈண்டுப் பெய்யக்கூடாது - இது நன்னிலம் ஆகவே கண்டுப் பெய்யலாம் என உணர்ந்து பெய்யும் அறிவு நிலையைப் பெற்றது அன்று மழை;