பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宽酸盛 லா, ச. ராமாமிருதம்

ஒரு நாளிரவு தெருக்கோடியில் வசிக்கும் அம்பட்டன் தாயாருக்கு அவசரமாய் ஆள் வந்தது. உடலின் ஊழச் சதை குலுங்க அவள் லொங்கு லொங்கென்று ஓடினாள்.

மளிகை வீட்டுப் பெண்ணுக்கு இடுப்பு வலி எடுக்குதாம் என்று ஊரெல்லாம் சமாசாரம் பற்றிக்கொண்டது.

ஒரே சமயம் இரண்டு பக்கமும் பேசும் சாமர்த்தியம், இந்த ஊர் வாய் என்னும் ஒரு வாய்க்குத்தான் உண்டு

என்ன மானங்கெட்ட பிழைப்புப் பார்த்தியா, இந்த மளிகை வீட்டுக்காரருக்கு!’ ጎ

"இந்தப் பையனும் இப்படி வீம்பாயிருக்கானே: சாவற வரைக்குமிருக்க முடியுமா?’’

அன்று இரவெல்லாம் அவன் துரங்கவேயில்லை. இடுப்பு வவியில் அவள் துவளுவதைப்பற்றி நினைக்கையில், அவன் இதயம் மாரைப் பி ப்த் துக் கொண் டு வந்துவிடும் போலிருந்தது. இப்பவாவது தன்னைப்பத்தி நினைக் கிறாளோ?

அவன் அறையின் வாசற் பக்கத்து ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக்கொண்டு கற்சிலைபோல் நின்றான். அதன் வழி பார்த்தால் பக்கத்துத் தெருவின் திருப்பம் தெரிந்தது. வாய்க்காலுக்குப் போகும் வழி,

விடியுமா? பலபலவென்று புலரும் வேளையில், ஒரு சிறு கூட்டம் அத்திருப்பத்தில் மெதுவாய் ஊர்ந்து செல்வதைக் கண்டான். எல்லோரும் மளிகை வீட்டுக்கார மனிதர்கள். அவர்களில் ஒருவன்-அவன் மாமனார். மஞ்சள் துணி சுற்றிய ஒரு சிறு மூட்டையை ஏந்திச் சென்றார். முகம் தொங்கியிருந்தது. அவனுக்குப் பிடரி குறுகுறுத்தது. மாரைப் பக்' கென்று அடைத்தது.