பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிவட்டம் 197

என்னில் ஒரு பங்குதான் கொடுப்பேன். எனக்கு, என்னை பத்திரமாய் வைத்துக்கொள்வேன். கொடுத்தால் என் தொழிலுக்குங் கொடுப்பேன். என் தறி, என் நூல், நான் நெய்யும் துணி...

  • இன்னிக்கு வெள்ளிக்கிழமை, புதுப்பாவு பூட்டணும், விளக்கு வெச்சுப்போச்சு இப்போ, சோம்பல் பட்டால், அப்புறம் நேரமிருக்காது.”

அவன் தாய் விளக்கைப் பிடித்தாள். சுருட்டிய பாவைத் தோளில் தாங்கிக்கொண்டு தறி மேடைமேல் ஏறினான்.

விசேற் கதவு திறந்து மூடியது.

யாரது?’’

பதிவில்லை. ஆனால் உள்ளே மாத்திரம் யாரோ,

இருளிலிருந்து விளக்கின் ஒளியின் வீச்சுகள் அவள் வருகையில். அவனுக்கு வாயடைத்துப் போயிற்று. கிழவி யின் உடலெல்லாம் வெடவெடவென்று ஆடியது. மாமி போரின் கை விளக்கை அவள் தன் கையில் வாங்கிக்கொண் டாள். பேச்சு அவளுக்கும் எழவில்லை. கன்னத்தில் கண்ணிர் மாலையாய் வழிந்தது. எப்படி இளைச்சுப் போயிருக்கா?

கிழவி தள்ளாடிப்போய் விசுப்பலகையில் உட்கார்ந்து கொண்டாள், வெளியிலிருந்து அவள் குரல் கணிரென்று அவர்களை எட்டியது.

  • பெண்ணே, விளக்கை உஷாராய்ப் பிடி. ஆடே பையா, அவள் சரியா பிடிக்காட்டால் கூட நீ அனாவசியமா கையை மிஞ்சிடாதே.”

அவன் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். அவள் கண்களிலிருந்து கண்ணிர் மாலை மாலையாய் உதிர்ந்து கொண்டேயிருந்தது. அதைத் தடுக்க அவன் ஒன்றும் முயல வில்லை. இருவர் மனமும் இன்றிரவில்தான் லயித் திருந்தது.