பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置要酸 வா. ச. ராமாமிருதம்

கீழ் கறுத்து, மேவானில் சாயங்கள் தோய்கின்றன. ஆனால் இன்னும் கொஞ்சநேரத்தில் நீர்த்துப்போய்... இப்பவே ஆங்காங்கே இருளின் ரிப்பன்கன்’, மரங்களி னின்று. செடிகளினின்று, முள்வேலியினின்று தொங்கி, காற்றில் அலைய ஆரம்பித்துவிட்டன. வேளை முதிர முதிர, இருள் தன் கறுப்பு அங்கியை அடர்த்தியாகத் தானே முடைந்துகொண்டுவிடும்.

தெருவில் நடமாட்டம் அவசரமாகிவிட்டது. ரயிலடி வீட்டுக்கு மிக்கக் கிட்ட வேலையிலிருந்து, பள்ளியிலிருந்து, அவரவர் ஜோலியிலிருந்து சிறுவர். சிறுமியர் ஆடவர். பெண்டிர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ரயிலடிக்குப் போய்க் கொண்டுமிருக்கின்றனர், பெரிய ஸ்டேஷனுக்குப் போய், பெரிய ரயில்களைப் பிடிக்க,

இது, இந்தக் காகநிதான் என் பொழுதுபோக்கு,

என்னைப் போன்றவர்க்கு.

வாசலுக்கு வெளியே ஒரு பசு மாடு, கள்ளப்பார்வை யோடு நிற்கிறது. ஏன் என்று எனக்குத் தெரியும். ஆடி விதைகள் கண்டிருக்கும் முளைகளைப் பதம் பார்க்க. ஏற்கெனவே ருசி கண்ட மாடு. அவ்வப்போது அவளுடைய கூக்குரல்கள் இடும் சாபங்கள் சான்று.

ஆனால் ஒன்றிரண்டு வாழைக் கன்றுகளிலிருந்து பயந்து கொண்டே எட்டிப் பார்க்கும் குருத்துக்கள், தொட்டியில் கொத்தமல்லித் துளிர்கள், ஓரிரண்டு பூச்செடிகள், இவ்வளவு தான். இதற்குமேல் இந்த மண்ணுக்குச் சக்தியில்லை.

நேற்றுவரை வாசலுக்குக் காவல் இரண்டு பூவரசுகள் நின்றிருந்தன. இன்று ஒன்றுதான் நிற்கிறது. மற்றதை வெட்டித் துண்டம் போட்டு வேலியோரமாக அடுக்கியாகி விட்டது. வீட்டில் இதுபற்றி இரண்டு கட்சிகள். மரம் நிழல் தருகிறது. குளுமை தருகிறது இருந்து விட்டுப்