பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் வேண்டாம் 143

  • Not that. எல்லாருமே நமக்கு நாமே பண்ணிக்கிற: அர்த்தம்தான் என்னுடைய பதினஞ்சாவது வயசிலிருந்தே நீங்கள் எனக்குப் பழக்கம். mean உங்களுடைய எழுத்து.' அவள் சிரித்தபோது, முகத்திலிருந்து ஐந்தாறு வருடங்கள் உதிர்ந்தன. என்ன வயதிருக்கும் முப்பது, முப்பத்தி அஞ்சு? முகத்தில் ஒளியும் நிழலும் மாறும் வேகத்தில், வயதை. ஸ்திரம் பண்ண முடியவில்லை.

“Thank you” grgårö pair. "ஏன்னா அம்மா அப்போத்தான் செத்துப்போனாள்.

இவள் யாரோடு பேசினாலும் இப்படி ஷாக் ட்ரீட்டு மெண்ட்தானோ?

என் பையன் இரண்டு தம்ளர்களில் காப்பி கொணர்ந்து எங்களிடையே வைத்துவிட்டுப் போனான். பால் எப்போ வந்தது? விருந்தாளியை எப்போ உணர்ந்தாள்? அதெல்லாம் 1 gift usrā (5gpi'i sãìàsit. None of my buShiess. 5srü1965uré. காணுவோமா என்றாகிவிட்டது. காப்பி நன்றாக இருந்தது.

அவள் சீப்பிக் குடித்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்ய முடியும்?

நாங்கள் சின்னக் குடும்பம் அப்பா, அம்மா, நான், தம்பி. ஏழ்மையான குடும்பம்தான். ஒரு காலத்தில் சரியாத் தானிருந்தோமாம். அப்போ கூட்டுக் குடும்பம் . அந்தக் காலத்து மிராசுதர்பார். நிலத்தைப் பண்ணையாளிடமோ, குத்தகைக்காரனிடமோ விட்டுவிட்டு வாசல் திண்ணையில், பக்கத்தில் வெற்றிலைச் செல்லம், பறங்கிக்காய்ப் பெரிசுக்கு வெள்ளிக் கூஜாவில் தீர்த்தம், போது போவதே தெரியாமல் சீட்டாட்டம். இந்த வர்க்கம்பற்றி என்னைவிட உங்களுக்கே தெரியும். நேரில் பார்த்திருப்பீர்கள். இவர்களுடைய தர்பாருக்கு எதிரே கை கட்டிக்கொண்டு, சிரம் குனிந்து நின்றுகொண்டிருந்த காத்தான், செல்லான், முருகன்.